திருப்பூர்,மே.5: கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிடுவதை தடை செய்ய கோரி எஸ்டிபிஐ கட்சியினர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். இதுகுறித்து எஸ்டிபிஐ கட்சி வடக்கு மாவட்ட துணை தலைவர் அப்துல் சத்தார் மாநகர போலீஸ் கமிஷனரிடம் அளித்த மனுவில், கேரளா ஸ்டோரி திரைப்படம் 05.05.2023 அன்று திருப்பூர் மாவட்டத்தில் 3 திரையரங்குகளில் திரையிடப்படுவதாக அறிகிறோம்.
இந்த திரைப்படமானது சிறுபான்மை சமூகத்தின் மீது வெறுப்பை ஏற்படுத்தி, பொது சமூகத்தின் மத்தியில் முஸ்லீம் சமூகத்தின் மீது வெறுப்பை ஏற்படுத்த வேண்டும் என்கிற அடிப்படையில் இந்துத்துவ பிரிவினைவாத மனநிலையோடு இஸ்லாமிய மக்கள் மனதை புன்படுத்துகிற நோக்கத்தோடு எடுக்கப்பட்ட படமாகும். இந்த திரைப்படம் வெளியாவதை தடை செய்ய வேண்டும். அப்படி மீறி இந்த திரைப்படம் திரையிடப்பட்டால் ஜனநாயக ரீதியான முற்றுகை போராட்டங்களை முன்னெடுப்போம் என கூறப்பட்டுள்ளது.
The post எஸ்டிபிஐ கட்சியினர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு appeared first on Dinakaran.

