×

மூதாட்டியிடம் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டியவர் கைது

 

காங்கயம், மே.5: ஊதியூர் அருகே குடிபோதையில் மூதாட்டியிடம் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டிய முதியவர் கைது செய்யப்பட்டார்.காங்கயம் அடுத்த ஊதியூர் அருகே நிழலி பகுதியை சேர்ந்தவர் மூதாட்டி நாச்சம்மாள் (80). இவர் புளி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 23ம் தேதி இரவு சுமார் 9 மணியளவில் அதே பகுதியை சேர்ந்த முருகன் (63) என்பவர் மூதாட்டி நாச்சம்மாள் வீட்டிற்கு குடிபோதையில் வந்து பணம் கேட்டு கத்தியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து மூதாட்டி சத்தம் போட அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து முதியவர் முருகனை பிடித்து, ஊதியூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து ஊதியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் முதியவர் முருகனை கைது செய்த போலீசார், தாராபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை சிறையில் அடைத்தனர்.

The post மூதாட்டியிடம் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Kangayam ,Pedgur ,Dinakaran ,
× RELATED தேங்காய் பருப்பு ஏற்றி சென்ற லாரியில் தீ விபத்து