×

திருப்பூர் மாநகராட்சியில் 49 வது வார்டில் அடிப்படை வசதிகள் குறித்து மேயர் ஆய்வு

 

திருப்பூர், மே 5: திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் மக்களுடன் மேயர் என்ற திட்டம் மூலம் மாநகராட்சி பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு பொதுமக்களின் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்து, அடிப்படை தேவைகளை நிறைவேற்றி வருகிறார். அந்த வகையில் நேற்று மாநகராட்சி 49-வது வார்டு பகுதியில் மேயர் தினேஷ்குமார் ஆய்வு செய்தார். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த அவர் உடனே நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

The post திருப்பூர் மாநகராட்சியில் 49 வது வார்டில் அடிப்படை வசதிகள் குறித்து மேயர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Ward 49 ,Tirupur Corporation ,Tirupur ,Tirupur Municipal Corporation ,Mayor ,Dinesh Kumar ,
× RELATED கல்வி நிறுவனங்களில் களைகட்டிய பொங்கல் விழா