×

நீலகிரியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் எம்பி ராசா பங்கேற்பு

 

ஊட்டி, மே 5: நீலகிரி எம்பி ஆ.ராசா இரண்டு நாட்கள் நீலகிரியில் நடக்கும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 6ம் தேதி சனிக்கிழமை மதியம் 3 மணிக்கு ஊட்டி நகரம் சார்பில், காந்தல் முக்கோணம் பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். 7ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணிக்கு கோத்தகிரி மற்றும் கீழ்கோத்திகிரி ஒன்றியங்கள் சார்பில் எஸ்.கைகாட்டி சன்சைன் நகர் பகுதியில் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இந்நிகழ்ச்சிகளில் அந்தந்த பகுதிகளை சார்ந்த நிர்வாகிகள், அனைத்து அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கழக செயல்வீரர்கள் அனைவரும் தவறாது கலந்து அன்புடன் வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post நீலகிரியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் எம்பி ராசா பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : MP Rasa ,Nilgiris ,Ooty ,MP A. Raza ,Nilgiris… ,Dinakaran ,
× RELATED குன்னூரில் குதிரை சாகசத்தில் ராணுவ வீரர்கள் அசத்தல்