×

புதிய பிஎப் ஓய்வூதிய திட்டத்தில் கூடுதலாக 1.16 சதவீதம் பிடித்தம்: ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: ஊழியர் வருங்கால வைப்பு நிதியின் புதிய பென்சன் திட்டத்தில் சேருபவர்களுக்கு கூடுதலாக 1.16 சதவீதம் பிடித்தம் செய்யப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தொழிலாளர் துறை வெளியிட்டுள்ள அறிக்கை: புதிய பென்சன் திட்டத்தில் வருங்கால வைப்பு நிதியில் ஊழியர்களின் பங்கான 12 சதவீதத்தில் இருந்து கூடுதலாக 1.16 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். தற்போது பென்சன் திட்டத்தில் அடிப்படை மாத சம்பளம் ரூ.15 ஆயிரம் பெறுகிறவர்களுக்கு 1.16 சதவீதத்தை அரசு தனது பங்காக செலுத்துகிறது. வருங்கால வைப்பு நிதி சார்பில் செயல்படுத்தப்படும் சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு பணியாளர்களின் அடிப்படை சம்பளத்தில் இருந்து 12 சதவீதம் அளிக்கப்படுகிறது.

இதில், 8.33 சதவீதம் பென்சன் திட்டத்துக்கும், 3.67 சதவீதம் வருங்கால வைப்பு நிதிக்கும் செல்கிறது. அடிப்படை மாத சம்பளம் ரூ.15 ஆயிரத்துக்கும் மேல் சம்பளம் வாங்கும் வருங்கால வைப்பு நிதியில் சேர்ந்துள்ள உறுப்பினர்கள் இந்த பென்சன் திட்டத்துக்கு கூடுதலாக 1.16 சதவீதம் செலுத்த தேவையில்லை. இது தொடர்பாக ஒன்றிய தொழிலாளர் நலத்துறை கடந்த 3ம் தேதி இரண்டு அரசாணைகளை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 4ம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவுகளை பின்பற்றி இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post புதிய பிஎப் ஓய்வூதிய திட்டத்தில் கூடுதலாக 1.16 சதவீதம் பிடித்தம்: ஒன்றிய அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Union Govt. New Delhi ,
× RELATED உயர் சாதி ஏழைகளுக்கான இட ஒதுக்கீட்டை...