×

மஞ்சுவிரட்டில் காளை முட்டி பலியான போலீஸ்காரரின் உடலை தோளில் சுமந்த பெண் எஸ்பி

புதுக்கோட்டை: மஞ்சு விரட்டில் காளை முட்டி உயிரிழந்த போலீஸ்காரரின் உடலை எஸ்பி வந்திதா பாண்டே, மயானத்துக்கு சுமந்து சென்றார். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே கல்லூர் கிராமத்தில் நேற்றுமுன்தினம் மஞ்சுவிரட்டு நடந்தது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மீமிசல் காவல்நிலைய காவலர் நவநீதகிருஷ்ணன் (32) காளை முட்டியதில் உயிரிழந்தார். இவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவித்தார். இந்நிலையில் நவநீதகிருஷ்ணன் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதை தொடர்ந்து அறந்தாங்கி எல்என் புரத்திலுள்ள காவலரின் வீட்டுக்கு சென்ற எஸ்பி வந்திதா பாண்டே, போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் அங்கிருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மயானத்துக்கு கொண்டு செல்வதற்காக காவலர் உடலை உறவினர்களுடன் இணைந்து எஸ்பி வந்திதா பாண்டேவும் தனது தோளில் தூக்கி சென்றார். தொடர்ந்து மயானத்தில் 21 குண்டுகள் முழங்க காவலர் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் உடல் தகனம் செய்யப்பட்டது. காவலரின் உடலை பெண் என்றும் பாராமல் எஸ்பி வந்திதா பாண்டா தோளில் சுமந்து சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

The post மஞ்சுவிரட்டில் காளை முட்டி பலியான போலீஸ்காரரின் உடலை தோளில் சுமந்த பெண் எஸ்பி appeared first on Dinakaran.

Tags : SP ,Manchuvrat ,Pudukkotta ,Vandita Pandey ,Pudukkoti ,
× RELATED ராமநாதபுரத்தில் கலவரம் தடுப்பு குறித்து ‘மாப் ஆபரேஷன்’