×

காஸ் சிலிண்டரில் டியூப் வெடித்து தொழிலாளி காயம்

இடைப்பாடி, மே 5:இடைப்பாடி வெள்ளாண்டிவலசை சேர்ந்த ராஜமாணிக்கம்(65) என்பவருக்கு சொந்தமான, டீ கடையில் நேற்று மதியம் வாடிக்கையாளர்கள் டீ குடித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக காஸ் சிலிண்டரின் டியூப் வெடித்ததில், கடையில் இருந்தவர்கள் அங்கிருந்து வெளியே ஓடினர். அப்போது, அங்கு டீ போட்டு கொண்டிருந்த டீ மாஸ்டரான போடிநாயக்கன்பட்டி அடுத்த சாமுண்டிவளவை சேர்ந்த சின்னபையன்(60) என்பவருக்கு இடது கை மற்றும் இடது காலில் லேசான தீக்காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் சிலிண்டரை நிறுத்தி தீயை அணைத்தனர். காஸ் கசிவில் காயமடைந்த டீ மாஸ்டர் சின்ன பையன் இடைப்பாடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து இடைப்பாடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post காஸ் சிலிண்டரில் டியூப் வெடித்து தொழிலாளி காயம் appeared first on Dinakaran.

Tags : Ethapadi ,Rajamanickam ,Vellandivalasi ,
× RELATED 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை