×

18.70 லட்சம் பேருக்கு நீட் தேர்வு ஹால்டிக்கெட் பதிவிறக்கலாம்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

சென்னை: மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள 18.70 லட்சம் பேருக்கு ஹால்டிக்கெட் விநியோகம் தொடங்கியது. எம்பிபிஎஸ், பல் மருத்துவம் மற்றும் இந்திய மருத்துவ முறைகளுக்கான படிப்புகளில், இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்ைக தொடங்க உள்ளதை அடுத்து மே 7ம் தேதி நுழைவுத் தேர்வு நடக்க உள்ளது. இந்த தேர்வு நாடு முழுவதும் 499 நகரங்களில் நடக்கிறது. வெளிநாடுகளில் 14 நகரங்களில் நடக்க உள்ளது. இந்த நுழைவுத் தேர்வில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து 18 லட்சத்து 72 ஆயிரத்து 341 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தற்போது, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவ மாணவியர் http://neet.nta.nic.in என்ற இணைய தளத்தில் இருந்து தங்களுக்கான ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அப்போது விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும். பதிவிறக்கம் செய்வதில் பிரச்னை உள்ள மாணவர்கள் அல்லது இயலாதவர்கள் 011-40759000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும். neet@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ள வேண்டும். இது தவிர கூடுல் விவரம் வேண்டுவோர் www.nta.ac.in என்ற இணைய தளத்தில் இருந்தும்ெ தரிந்து கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

The post 18.70 லட்சம் பேருக்கு நீட் தேர்வு ஹால்டிக்கெட் பதிவிறக்கலாம்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : National Exam Agency ,Chennai ,Halticut ,Dinakaran ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...