×

திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவர் கோயிலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது

திருவள்ளூர்,: 108 வைணவ திவ்ய தேசங்களில் திருவள்ளூர் ஸ்ரீவைத்திய வீரராகவப் பெருமாள் திருக்கோயிலும் ஒன்றாகும். பிரசித்தி பெற்ற இக்கோயிலில் சித்திரை மாத பிரமோற்சவம் கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பிரமோற்சவத்தை முன்னிட்டு நாள்தோறும் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இந்நிலையில் சித்திரை பிரமோற்சத்தின் 7 ம் நாளான செவ்வாய்கிழமை தேரோட்டமும் வெகு விமர்சையாக நடைபெற்றது.

பிரமோற்சவத்தின் 9ம் நாளானநேற்று காலையில் பல்லக்கில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவமூர்த்தி ஸ்ரீ வீரராகவ பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் முக்கிய மாடவீதிகளின் வழியாக பல்லக்கில் பவனி வந்தார். இதனைத் தொடர்ந்து கோயில் குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற்றது.

பிறகு சக்கரத்தாழ்வார் மற்றும் சின்னபெருமாளும் கோயில் குளத்தில் நீராடினர். ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோயில் குளத்தில் நீராடினால் நோய் நீங்கும் என்பதால் இந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியில் திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டு கோவிந்தா, கோவிந்தா என கோஷமிட்டு வீரராகவரை குளத்தில் நீராடி வழிபட்டனர்.

The post திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவர் கோயிலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Veeraragavar Temple ,Tiruvallur ,Sri ,Perumal Thirukhoe ,Thiruvallur Sri ,Shri ,
× RELATED முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு இட ஒதுக்கீடு