×

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பூக்களின் விலை ‘கிடுகிடு’ உயர்வு: கோயம்பேட்டில் 1 கிலோ கனகாம்பரம் ரூ.700

சென்னை: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு திண்டுக்கல், மதுரை, வேலூர், நிலக்கோட்டை, திருச்சி, ஒசூர், சேலம் மற்றும் கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து தினமும் பூக்கள் வருகிறது. கடந்த 11 நாட்களுக்கு முன்பு கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லி ரூ.300க்கும், ஐஸ் மல்லி ரூ.250க்கும், காட்டுமல்லி, ஜாதிமல்லி, முல்லை ரூ.200க்கும், கனகாம்பரம் ரூ.300க்கும், அரளி பூ ரூ.150க்கும், சாமந்தி ரூ.160க்கும், சம்பங்கி ரூ.80க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.60க்கும், பன்னீர் ரோஸ் ரூ.50க்கும் விற்பனையானது.

இந்நிலையில், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று காலை ஒரு கிலோ மல்லி ரூ.450க்கும் காட்டுமல்லி ரூ.350க்கும் ஐஸ் மல்லி, ஜாதிமல்லி, முல்லை அரளி பூ ரூ.300க்கும் விற்பனை செய்யப்பட்டது. கனகாம்பரம் ரூ.700க்கும் சாமந்தி ரூ.180க்கும் சம்பங்கி ரூ.150க்கும் பன்னீர் ரோஸ் ரூ.100க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் நிர்வாக குழு தலைவர் முத்துராஜ் கூறும்போது, ‘‘ பூக்களின் விற்பனை மந்தமாகவே நடைபெற்று வந்ததால், வியாபாரிகள் கடும் வேதனை அடைந்தனர். சித்ரா பவுர்ணமியை முன்னிட்டும், இன்று மதுரையில் அழகர் ஆற்றில் இறங்குவதால் நேற்று காலை அனைத்து பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. பூக்களின் விலை உயர்வு இன்றும் நீடிக்கும்’’ என்றார்.

The post சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பூக்களின் விலை ‘கிடுகிடு’ உயர்வு: கோயம்பேட்டில் 1 கிலோ கனகாம்பரம் ரூ.700 appeared first on Dinakaran.

Tags : Chitra Pournemi ,Coimpet ,Chennai ,Chitra Pournami ,Coimbed Market ,Chennai Coimbade Market ,Dindikal ,Chitra ,Pournami ,
× RELATED சென்னை கோயம்பேட்டில் இருந்து...