×

உத்திரமேரூர் மாரிமேல்கட்டம்மன் கோயிலில் 1008 பால்குடம் ஊர்வலம்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் மாரிமேல்கட்டம்மன் கோயிலில் நடைபெற்ற 1008 பால்குடம் ஊர்வலம் விழாவில், ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்து சாமி தரிசனம் செய்தனர். உத்திரமேரூர் பேரூராட்சியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீமாரிமேல்கட்டம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் 11ம் ஆண்டு 1008 பால்குடம் ஊர்வலம் நேற்று வெகு விமரிசையாக நடந்தது. விழாவை முன்னிட்டு காலை ஸ்ரீமாரிமேல்கட்டம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து விரதமிருந்த பக்தர்கள் முத்து பிள்ளையார் கோயிலிருந்து 1008 பால்குடங்களுடன் நாதஸ்வர மேளதாள வாத்தியங்களுடன், தாரை தப்பட்டம், வானவேடிக்கைகள் முழங்க பஜார் வீதி, சன்னதி தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று மாரிமேல்கட்டம்மனுக்கு பக்தர்கள் தங்கள் கரங்களால் பால் அபிஷேகம் செய்து அம்மனை வழிபட்டனர்.

இதனையடுத்து பிற்பகல் கோயில் வளாகத்தில் பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிட்டனர். மேலும், மாலை கோமாதா பூஜை சிறப்பாக நடந்தது. இரவு அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் சிறப்பு அலங்காரத்துடன் ஸ்ரீமாரிமேல்கட்டம்மன் முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா வந்து காட்சியளித்தார். அப்போது பக்தர்கள், தீபாராதனை காண்பித்தும் தேங்காய் உடைத்தும் அம்மனை வழிபட்டனர். விழாவின் காரணமாக கோயில் வளாகத்தில் காலை முதல் மாலை வரை பக்தர்களுக்கு அறுசுவை உணவுடன் கூடிய அன்னதானம் வழங்கப்பட்டது.

The post உத்திரமேரூர் மாரிமேல்கட்டம்மன் கோயிலில் 1008 பால்குடம் ஊர்வலம் appeared first on Dinakaran.

Tags : 1008 Balkudam procession ,Uttramerur Marimalkattamman Temple ,Uttramerur ,1008 Balkudam procession ceremony ,Balkudum ,Sami Vise ,Balkudam procession ,
× RELATED பல ஆண்டுகளாக தொடரும் இருதரப்பு...