×

சோகண்டி கிராமத்தில் தீ விபத்தில் வீடு இழந்தவருக்கு நிவாரணம்: எம்எல்ஏ வழங்கினார்

ஸ்ரீபெரும்புதூர்: சோகண்டி கிராமத்தில் தீ விபத்தில் குடிசை வீட்டை இழந்த குடும்பத்தினருக்கு, அரசி, காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருட்களை ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை வழங்கினார். ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், சோகண்டி கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராஜா. இவருக்கு திருமணமாகி மனைவி ரஞ்சிதம் மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ராஜா குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென குடிசை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதனைகண்ட அனைவரும் வீட்டில் இருந்து வெளியேறினர். இந்த தீ விபத்தில் குடிசை வீடு முழுவதும் எரிந்து நாசமாகியது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை, தீ விபத்தில் குடிசை வீட்டை இழந்த குடும்பத்தினருக்கு அரிசி, பருப்பு, காய்கறி, வேஷ்டி, சேலை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார். அப்போது, ஸ்ரீபெரும்புதூர் வட்டார காங்கிரஸ் தலைவர் நிக்கோலஸ், ஒன்றிய கவுன்சிலர் வாணிஸ்ரீ உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

The post சோகண்டி கிராமத்தில் தீ விபத்தில் வீடு இழந்தவருக்கு நிவாரணம்: எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Sokandi village ,MLA ,Sriparuthur ,Sriperuthur ,
× RELATED டிடிவி, ஓபிஎஸ் டெபாசிட் வாங்குவதே பெரிய விஷயம்: அதிமுக எம்எல்ஏ பளீர்