×

அமெரிக்காவில் இந்திய நிறுவனங்கள் ரூ.3.27லட்சம் கோடி முதலீடு

வாஷிங்டன்: இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்டுள்ள எரிக் கார்செட்டி முன்னிலையில், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரஞ்சித் சிங் சந்து இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) நடத்திய ‘இந்திய வேர்கள், அமெரிக்க மண்’ என்ற ஆய்வு முடிவுகளை நேற்று முன்தினம் வெளியிட்டார். அதில், அமெரிக்காவில் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பிற்காக இந்திய நிறுவனங்கள் ரூ.1512 கோடி செலவழித்தன என்றும் அந்த நிறுவனங்கள் சார்பில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (ஆர்&டி) திட்டங்களுக்காக ரூ. 8178 கோடி நிதியுதவி செய்யப்பட்டுள்ளது. 163 இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவில் ரூ.3.27 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளன. நாட்டில் கிட்டத்தட்ட 425,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அமெரிக்காவில் இந்திய நிறுவனங்கள் ரூ.3.27லட்சம் கோடி முதலீடு appeared first on Dinakaran.

Tags : US ,Washington ,Eric Garcetti ,India ,Taranjit Singh Sandhu ,Dinakaran ,
× RELATED டிக்டாக் செயலியை தடை செய்வதற்கான...