×

உலக குத்துச்சண்டை போட்டி இந்திய வீரர் நிஷாந்த் வெற்றி

தாஷ்கென்ட்: உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கென்டில் நடந்து வருகிறது. இதில் 71 கிலோ எடைப்பிரிவின் 2-வது சுற்றில் இந்திய வீரர் நிஷாந்த் தேவ், 2021-ம் ஆண்டு உலக போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற அஜர்பைஜான் வீரர் சார்கான் அலியெவ்வை சந்தித்தார். இதில் அரியானாவை சேர்ந்த 22 வயதான நிஷாந்த் தேவ் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினார். இறுதியில் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். அடுத்து அவர் தென்கொரியா வீரர் லீ சாங்மினை சந்திக்கிறார்.

The post உலக குத்துச்சண்டை போட்டி இந்திய வீரர் நிஷாந்த் வெற்றி appeared first on Dinakaran.

Tags : Nishant ,World Boxing Championship ,Tashkent ,Uzbekistan ,
× RELATED நாகர்கோவிலில் சுற்றி திரிந்த 13 நாய்களுக்கு கருத்தடை