×

தன்னுடன் பழகுவதை நிறுத்தியதால் அமிலம் ஊற்றி பெண்ணை எரித்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனை: மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

ஆலந்தூர்: புழுதிவாக்கம் சிவப்பிரகாசம் நகரை சேர்ந்தவர் ஆனந்த் (35). இவரது மனைவி யமுனா (33). இவர் ஆதம்பாக்கம் வாணுவம்பேட்டையில் உள்ள ரத்த பரிசோதனை நிலையத்தில் கடந்த 2018ம் வேலை பார்த்து வந்தார். அதே கூடத்தில் வேலை செய்து வந்த அண்ணாநகர் பெல் ஏரியாவைச் சேர்ந்த ராஜா (45) என்பவருடன் யமுனாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் ராஜாவின் நடவடிக்கை சரியில்லாததால், அவருடன் பழகுவதை யமுனா நிறுத்தி விட்டார். ஆனால் ராஜா மீண்டும் தன்னுடன் பழகுமாறு யமுனாவுக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். யமுனாவும் தொடர்ந்து மறுக்கவே கோபமடைந்த ராஜா, 2018ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி யமுனா ஆய்வகத்தில் இருந்தபோது அவர் மீது அமிலத்தை ஊற்றி தீயிட்டு கொளுத்திவிட்டு ஓடிவிட்டார்.

யமுனாவின் அலறல் சத்தத்தை கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து ஆம்புலன்ஸ் மூலம் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து யமுனாவின் கணவர் ஆனந்த் கொடுத்த புகாரின் பேரில் மடிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் இந்த வழக்கானது செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் கடந்த 5 வருடங்களாக நடந்தது. இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு நீதிபதி எழிலரசு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் ராஜாவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

The post தன்னுடன் பழகுவதை நிறுத்தியதால் அமிலம் ஊற்றி பெண்ணை எரித்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனை: மகிளா நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Mahila ,Anand ,Shivprakasam ,Purudivakam ,Yamuna ,Adambakkam Vanuvampet ,
× RELATED பிரதமர் மோடியை கண்டித்து மகிளா காங்கிரசார் ஆர்ப்பாட்டம்