×

பாஸ்தாவின் கதை

‘பதின்மூன்றாம் நூற்றாண்டு வெனிஸ் நகரப் பயணி மார்க்கோ போலோதான் பாஸ்தாவை இத்தாலிக்கு அறிமுகப்படுத்தினார். சீனர்களுக்கு எப்படி `நூடுல்ஸ்’ஸோ, அதேபோலத்தான் இத்தாலியர்களுக்கு `பாஸ்தா’. நூடுல்ஸ் வேறு; பாஸ்தா வேறு. ‘அது இத்தாலியர்களுக்கே சொந்தமானது. எங்கள் உணவுக் கலாசாரத்துடன் இரண்டறக் கலந்தது’ என்று இத்தாலியர்கள் வாதமாக இன்று வரை இருந்து வருகின்றது. ஆங்கிலத்தில், இத்தாலிய மொழியில் பாஸ்தா என்ற சொல்லுக்கு மாவு என்று பொருள். மக்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் உணவகங்களில் தங்களுக்கு விருப்பமான பாஸ்தாவை சாப்பிடுகிறார்கள். எல்போ மக்ரோனி, முட்டை நூடுல்ஸ், ஃபுசில்லி, லிங்குயின், ஸ்பாகெட்டி, மனிகோட்டி, பென்னே ரிகேட், ரோடெல்லே போன்ற சில வகையான பாஸ்தாவை மக்கள் தேர்ந்தெடுத்து ரசிக்க முடியும். மக்கள் பல்வேறு சுவைகளில் பாஸ்தாவை சமைக்கிறார்கள். மேலும், அவர்கள் தங்கள் நூடுல்ஸை வெவ்வேறு வடிவங்களில் செய்ய முயற்சி செய்கிறார்கள்.

பாஸ்தா பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள்

*இத்தாலியில் வாழும் ஒருவர் வருடத்திற்கு 60 பவுண்டு பாஸ்தா சாப்பிடுகிறார்கள். நமக்கு எப்படி அரிசி முதன்மை உணவோ இத்தாலியர்களுக்கு பாஸ்தா.
*அமெரிக்கர்கள் வருடத்திற்கு நபருக்கு சுமார் 20 பவுண்டுகள் பாஸ்தா சாப்பிடுகிறார்கள்.
*பாஸ்தாவில் பிரபலமான வடிவங்கள் மக்ரோனி, பென்னே மற்றும் ஸ்பாகெட்டி அதிகம் விற்பனை ஆகின்றது.
*அமெரிக்கர்கள் ஆண்டுக்கு சுமார் 4 பில்லியன் பாஸ்தா பாக்கெட்களை உற்பத்தி செய்கின்றார்கள்.
*அல் டெண்டே என்ற பாஸ்தா மிகவும் சுவையானது வடிவத்திலும் மாறுபட்டு இருக்கும்.
*பாஸ்தாவில் 350க்கும் மேற்பட்ட வடிவங்கள் உள்ளது.
*உலக பாஸ்தா தினம் அக்டோபர் 25 அன்று கொண்டாடப்படுகிறது,

இட்லி, தோசை, வடை

‘வரலாற்றுத் துணைவன்’ மேலைச் சாளுக்கியர்களில் மூன்றாம் சோமேஸ்வரன் முக்கியமான அரசன். கி.பி.1126 முதல் கி.பி.1138 வரை கல்யாணி என்ற நகரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட அரசனவன். அந்நகரின் இன்றைய பெயர் பிடார். இது கர்நாடகாவில் அமைந்துள்ளது. ஹொய்சால அரசனான விஷ்ணுவர்தனை தோற்கடித்த இவ்வரசன் ஆந்திர, திராவிட அதாவது சேர, சோழ, பாண்டிய) மகத, நேபாள அரசர்களை வென்றதாக இவனது கல்வெட்டு கூறுகிறது. இந்த மன்னன் அபிலாஷிதாரத சிந்தாமணி என்ற சமஸ்கிருத நூலை இயற்றியிருக்கிறார். இதனை மனசொல்லாசா என்றும் சொல்வார்கள். இந்த நூலில் அன்னபோகம் என்ற பகுதியில் உணவு பற்றிய குறிப்புகள் உள்ளன. அசைவம் மற்றும் சைவ உணவுகள் பற்றியும் அவற்றை சமைக்கும் முறை பற்றியும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நூலில் குறிப்பிடப்படும் பல உணவுகள் இன்றும் மஹாராஷ்ட்ரா, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திராவில் தயாராகின்றன என்பதுதான் சுவாரஸ்யம். குறிப்பாக, இட்லி, தோசை, வடை, தாஹிவடை, போளி, வடியன், லட்டு ஆகியவற்றைச் சொல்லலாம். அந்நாட்களில் அரசர்களுக்கு தங்கத் தட்டில்தான் உணவு பரிமாறப்பட்டிருக்கிறது. இந்த நூலைப் பற்றிய இந்திய உணவியல் ஆய்வுகளின் தந்தை அசயா தனது ‘இந்திய உணவுகள்: ஒரு வரலாற்றுத் துணைவன்’ என்ற நூலில் விரிவாகப் பதிவு செய்துள்ளார்.

உப்பு கரிக்கும் அரிசி

அரிசி இந்தியாவுக்கு வந்து சுமார் மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் என்கிறார்கள். அரிசியின் பூர்வீகம் இந்தியா அல்ல சீனாதான். சீனாவின் மஞ்சள் நதிக் கரைகளில் சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நெல்லில் தொல் படிமங்கள் கிடைத்துள்ளதுவே இதற்கு சாட்சி. ஆனால், மிக ஆதிகாலத்திலேயே சீனாவிலிருந்து நமது வடகிழக்கு மாநிலங்கள் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்துவிட்டது அரிசி. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த காலத்தில் நம்மிடம் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட பாரம்பரிய அரிசி ரகங்கள் இருந்தன என்கிறார் நெல் ஆராய்சி நிபுணர் ரிச்சாரியா. அந்த பாரம்பரிய அரிசிகளில் ஒன்றுதான் காலாநமக். காலா என்றால் கருப்பு. நமக் என்றால் உப்பு. கறுப்பு உப்பு என்பதே இதன் பொருள். பிளாக் சால்டை ஹிந்தியின் காலா நமக் என்று சொல்வார்கள். இந்த அரிசியும் உப்புத்தன்மை மிகுந்து இருப்பதால் இதை காலா நமக் என்கிறார்கள். சுமார் மூன்றாயிரம் ஆண்டுகளாக கங்கை நதிக்கரை சமவெளிகளில் பயிரிடப்பட்ட இந்த காலாநமக் அரிசியைத்தான் புத்தர் விரும்பிச் சாப்பிட்டார் என்கிறார்கள். சாதாரண பழுப்பு அரிசியில் உள்ளதைவிட சிறப்பான தாது உப்புகள் இதில் நிறைந்துள்ளன. தொடர்ந்து இதனை சாப்பிடும் போது உடலில் சாத்விக குணம் உண்டாகும் என்கிறார்கள். ரத்த ஓட்டம் சீராக இருக்கும். உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும். இன்றும் புத்த பிக்குகள் காலா நமக் அரிசியைத்தான் சாப்பிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்கானிக் கடைகளில் காலாநமக் இன்றும் கிடைக்கிறது.

காரிகா

The post பாஸ்தாவின் கதை appeared first on Dinakaran.

Tags : Marco Polothan ,Italy ,Italians ,
× RELATED ஒரே நாடு, ஒரே இட்லி என சுடப்பார்க்கிறார் மோடி; நடிகர் கருணாஸ் கலாய்