×

ஆவடி பகுதியில் 21 மின் திருட்டுகள் கண்டுபிடிப்பு: இழப்பீட்டுத் தொகை ரூ.11.42 லட்சம் வசூல்!

ஆவடி: கடந்த மாதம் 20-ம் தேதி அன்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் சென்னை அமலாக்க கோட்டத்தின் சென்னை மையம், சென்னை வடக்கு, சென்னை தெற்கு, சென்னை மேற்கு, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் அமலாக்க அதிகாரிகள் சென்னை மேற்கு மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட ஆவடி பகுதியில் கூட்டு ஆய்வு மேற்கொண்ட போது 21 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ரூ.10,63,761 (ரூபாய் பத்து லட்சத்து அறுபத்து மூவாயிரத்து எழுநூற்று அறுபத்தொன்று மட்டும்) இழப்பீட்டு தொகையாக மின் நுகர்வோருக்கு விதிக்கப்பட்டது.

மேலும், சம்பந்தப்பட்ட மின் நுகர்வோர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க முன்வந்து அதற்குரிய சமரசத் தொகை ரூ.79,000 (ரூபாய் எழுபத்தொன்பதாயிரம் மட்டும்) செலுத்தியதால் அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் ஏதும் பதிவு செய்யப்படவில்லை. மின் திருட்டு சம்பந்தமான தகவல்களை செயற்பொறியாளர், அமலாக்கம், சென்னை கைபேசி 9445857591 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஆவடி பகுதியில் 21 மின் திருட்டுகள் கண்டுபிடிப்பு: இழப்பீட்டுத் தொகை ரூ.11.42 லட்சம் வசூல்! appeared first on Dinakaran.

Tags : Awadi ,Tamil Nadu Electricity and Sharing Corporation ,Chennai Enforcement ,Dinakaran ,
× RELATED சென்னை ஆவடியில், மதுபோதையில் காவலரை தாக்க முயன்ற இளைஞர்