×

மாடு முட்டி பலியான காவலர் உடலை மயானத்துக்கு தோளில் சுமந்து சென்ற பெண் எஸ்பி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே கல்லூர் கிராமத்தில் உள்ள அரிய நாயகி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் புதுப்பட்டியை சேர்ந்த பார்வையாளர் சுப்பிரமணியன் என்பவர் காளை குத்தியதில் படுகாயம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

மேலும் மஞ்சுவிரட்டு போட்டியில் படுகாயம் அடைந்த அந்த நபரை மீட்க சென்ற மீமிசல் காவல் நிலையத்தில் பணிபுரியும் நவநீதகிருஷ்ணன் என்பவரின் வயிற்றில் காளை குத்தியதில் படுகாயம் அடைந்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலானது நேற்று அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு பிரதேச பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இன்று நவநீதகிருஷ்ணன் இல்லத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் நவநீதகிருஷ்ணன் உடலுக்கு மரியாதை செலுத்தினர். மரியாதை செலுத்திய சிறிது நேரத்தில் அவருடைய உடலை தோலில் சுமந்து அங்கிருந்து அருகேயுள்ள மயானகரைக்கு கொண்டுசென்றனர். அங்கு அவருக்கு அரசு மரியாதையுடன் 10 காவலர்கள் 3 குண்டுகளுடன் 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினர். காவல் நிலையத்தில் மாடு முட்டி உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post மாடு முட்டி பலியான காவலர் உடலை மயானத்துக்கு தோளில் சுமந்து சென்ற பெண் எஸ்பி appeared first on Dinakaran.

Tags : Mayanam ,Pudukkottai ,Pudukkotta District ,Kallur Village ,Arimala ,Amman Temple ,Dinakaran ,
× RELATED திரவ உயிர் உரங்களை பயன்படுத்தி...