×

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்த சூரத் நீதிபதி எச்.எஸ்.வர்மாவுக்கு பதவி உயர்வு..!!

சூரத்: அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கிய சூரத் நீதிபதி எச்.எஸ்.வர்மாவுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. நீதிபதி எச்.எஸ்.வர்மா ராஜ்கோட் மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். மோடி என்ற பெயர் கொண்டவர்களை அவதூறாக பேசினார் என்ற புகாரின்பேரில் தொடரப்பட்ட வழக்கில் ராகுலுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கர்நாடகம் கோலாரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதற்காக ராகுல் காந்திக்கு சூரத் நீதிபதி வர்மா 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தார்.

2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து வயநாடு எம்.பி. பதவியிலிருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரிய ராகுலின் மனுவை சூரத் அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தற்போது குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்திருக்கிறார். இந்நிலையில், சூரத் தலைமை நீதித்துறை நடுவராக இருந்த வர்மாவுக்கு ராஜ்கோட் மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

The post அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்த சூரத் நீதிபதி எச்.எஸ்.வர்மாவுக்கு பதவி உயர்வு..!! appeared first on Dinakaran.

Tags : H.R. ,Raqul Gandhi ,S.S. ,vermau ,H.R. S.S. ,Warma ,Dinakaran ,
× RELATED நெம்மேலி குப்பத்தில் மீன் பிடி...