×

பிக்பாஸில் அசீமின் வெற்றியில் முறைகேடு கேட்டால் கொலை மிரட்டல்: பிரபல யூடியூபர் பரபரப்பு புகார்

சென்னை: தனியார் டிவி நிகழ்ச்சியில் பட்டம் வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பது குறித்து தகவல் கேட்டதால் அசீம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மிரட்டல் விடுப்பதாக யூடியூபர் ஜோ.மைக்கேல் புகார் தெரிவித்துளளார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தபின் செய்தியாளர்களை சந்தித்த யூடியூபர் ஜோ.மைக்கேல் தனியார் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சியில் சீரியல் நடிகர் அசீம் வெற்றிபெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது என்று தெரிவித்துள்ளார்.

அசீமின் வெற்றி குறித்து தகவல் கேட்டு டெல்லியில் உள்ள இந்திய ஒலிபரப்பு அறக்கட்டளையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியதாகவும் தெரிவித்திருக்கிறார். ஆனால் அசீம் மற்றும் அவரது நண்பர்கள் தேவராஜ், சிங்காரவேலன் ஆகியோர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் அளித்த மனுவை திரும்பபெறக்கோரி தொடர்ந்து தன்னை மிரட்டிவருவதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு அளித்ததாகவும் தெரிவித்தார்.

The post பிக்பாஸில் அசீமின் வெற்றியில் முறைகேடு கேட்டால் கொலை மிரட்டல்: பிரபல யூடியூபர் பரபரப்பு புகார் appeared first on Dinakaran.

Tags : Azeem ,PigBass ,Chennai ,Azim ,PickBass ,
× RELATED வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் கமிஷனர் ஆய்வு