×

இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தில் உதவி மேலாளர்

தெலங்கானா, ஐதராபாத்தில் உள்ள இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி விவரம்

1. Assistant Manager (Actuarial): 5 இடங்கள். தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பு முடித்திருப்பதோடு IAI ல் தேர்ச்சி.
2. Assistant Manager (Finance): 5 இடங்கள். தகுதி: 60% மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் ACA/AICWA/ACMA/ACS/CFA ஆகியவற்றில் தேர்ச்சி.
3. Assistant Manager (Law): 5 இடங்கள். தகுதி: சட்டப்படிப்பில் 60% மதிப்பெண்களுடன் பி.எல். தேர்ச்சி.
4. Assistant Manager (Information Technology): 5 இடங்கள். தகுதி: எலக்ட்ரிக்கல்/ எலக்ட்ரானிக்ஸ்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்/தகவல் தொழில்நுட்பம்/சாப்ட்வேர் இன்ஜினியரிங் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் 60% மதிப்பெண்களுடன் பி.இ., தேர்ச்சி அல்லது 60% மதிப்பெண்களுடன் எம்சிஏ தேர்ச்சி.
5. Assistant Manager (Research): 5 இடங்கள். தகுதி: ஏதேனும் ஒரு பாடத்தில் முதுநிலை பட்டம் தேர்ச்சி அல்லது Economics/Econometrics/Quantitative Economics/Mathematical Economics/Integrated Economics/Statistics/Mathematical Statistics/ Applied Statistics & Informatics ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் 60% மதிப்பெண்களுடன் 2 வருட முதுகலை டிப்ளமோ தேர்ச்சி.
6. Assistant Manager (Generalist): 20 இடங்கள். தகுதி: 60% மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு தேர்ச்சி.

வயது: 10.05.2023 தேதியின்படி 21 லிருந்து 30க்குள். (அதாவது விண்ணப்பதாரர்கள் 11.05.1993 ம் தேதிக்கு பின்னரும், 10.05.2002 தேதிக்கு முன்னரும் பிறந்திருக்க வேண்டும்). எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளம், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆணடுகளும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

சம்பளம்: ரூ.44,500- 89,150.விண்ணப்பதாரர்களில் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

கட்டணம்: பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.750/-. எஸ்சி/எஸ்டி/ மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100/- இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். www.irdai.gov. in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.05.2023

The post இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தில் உதவி மேலாளர் appeared first on Dinakaran.

Tags : Insurance Regulatory Commission of India ,Telangana, Hyderabad ,Dinakaran ,
× RELATED இருப்பவல் திருப்புகழ்