×

“ஆளுநரே உங்கள் கோபத்தை ரசிக்கிறோம்” : மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் ட்வீட்!!

சென்னை : களைகளுக்கு கோடாலிகள் மீது கோபம் வருவது இயற்கை தான் என்பதை நாங்கள் அறிவோம் என்று சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். அண்மையில் ஆங்கில செய்தித்தாளுக்கு பேட்டி அளித்த ஆளுநர் ஆர் என் ரவி,”திராவிட மாடல் கொள்கை என்பது காலாவதியான கொள்கை, காலாவதியான கொள்கையை வைத்துக் கொண்டு திராவிட மாடல் ஆட்சி நடைபெறுகிறது. காலாவதியான கொள்கையை மீண்டும் புதுப்பிக்க முயற்சி நடைபெற்று வருகிறது; ஒரே நாடு ஒரே பாரதம் கொள்கைக்கு எதிரானதே திராவிட மாடல். முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் தனக்கும் இடையே நல்லுறவு நிலவுகிறதுமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்ல மனிதர், அவர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன்”என்றார்.

இந்நிலையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில்,

“திராவிட மாடல் செத்துப் போன தத்துவம்.”

“மார்க்சியம் இந்தியாவை சிதைத்துவிட்டது.”

“ பரிணாமக்கோட்பாடு மேற்கத்திய அடிமைத்தனம்”

என்று சொல்லும்
@rajbhavan_tn
அவர்களே!

களைகளுக்கு கோடாலிகள் மீது கோபம் வருவது இயற்கை தான் என்பதை நாங்கள் அறிவோம்.

உங்கள் கோபத்தை ரசிக்கிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post “ஆளுநரே உங்கள் கோபத்தை ரசிக்கிறோம்” : மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் ட்வீட்!! appeared first on Dinakaran.

Tags : Governor ,Madurai ,GP ,SV ,venkatesan ,Chennai ,Madurai M. ,GP SV ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகையையொட்டி விற்பனைக்காக...