×

காலாவதியான கொள்கையை வைத்துக் கொண்டு திராவிட மாடல் ஆட்சி நடைபெறுவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி சர்ச்சை பேச்சு!!

சென்னை : திராவிட மாடல் கொள்கை என்பது காலாவதியானது என்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் விமர்சனம் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.காலாவதியான கொள்கையை வைத்துக் கொண்டு திராவிட மாடல் ஆட்சி நடைபெறுவதாகவும் ஆளுநர் பேசி உள்ளார்.ஆங்கில செய்தித்தாளுக்கு பேட்டி அளித்த ஆளுநர் ஆர் என் ரவி,”திராவிட மாடல் கொள்கை என்பது காலாவதியான கொள்கை, காலாவதியான கொள்கையை வைத்துக் கொண்டு திராவிட மாடல் ஆட்சி நடைபெறுகிறது. காலாவதியான கொள்கையை மீண்டும் புதுப்பிக்க முயற்சி நடைபெற்று வருகிறது; ஒரே நாடு ஒரே பாரதம் கொள்கைக்கு எதிரானதே திராவிட மாடல். முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் தனக்கும் இடையே நல்லுறவு நிலவுகிறது

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்ல மனிதர், அவர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். மாநில அரசுகளின் நிர்வாகத்தில் ஆளுநர்கள் தலையிடுவதாக கூறுவது தவறான குற்றச்சாட்டாகும். ஆளுநர் ஒன்றும் ராஜா அல்ல. ராஜ்பவன் என்ற ஆளுநர் மாளிகையின் பெயரை மாற்ற யோசித்து வருகிறேன்.ராஜ்பவன் என்ற பெயரை லோக் பவன் அதாவது மக்கள் இல்லம் என அழைக்க விரும்புகிறேன்,”என்றார். மேலும் பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுனரை அரசியல் கருவியாக பாஜக பயன்படுத்துகிறதா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்க ஆளுநர் மறுத்துவிட்டார்.

The post காலாவதியான கொள்கையை வைத்துக் கொண்டு திராவிட மாடல் ஆட்சி நடைபெறுவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி சர்ச்சை பேச்சு!! appeared first on Dinakaran.

Tags : Governor ,R.R. N.N. ,Chennai ,Tamil Nadu ,R.R. N.N. ravie ,R.R. ,Dinakaran ,
× RELATED ஒரு காலத்தில் ஏழ்மையின் தாயகமாக...