×

நெல்லை, தென்காசி மாவட்டத்தில் காலாவதியான குளிர்பானம் விற்ற 12 கடைக்காரர்கள் மீது நடவடிக்கை

நெல்லை,மே4: நெல்லை, தென்காசி மாவட்டங்களில் குளிர் பானங்கள், தண்ணீர் பாட்டில்களில் தயாரிப்பு தேதி, கலாவதி தேதி இல்லாமல் விற்பனை செய்த 12 கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முருகசுப்பிரமணியன் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் ‘‘நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் தலைமையில், தொழிலாளர் துணை ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் முத்திரை ஆய்வாளர் அடங்கிய குழுவினர் நெல்லை, தென்காசி மாவட்ட கடைகள், நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

குளிர்பானம், தண்ணீர் பாட்டில், சிகரெட் லைட்டர் விற்பனை செய்யும் கடைகளில் சட்டமுறை எடையளவு, பொட்டல பொருட்கள் விதிகள் கீழ் பொட்டலமிடுபவர், இறக்குமதியாளர் பதிவுச்சான்று பெறாமல் விற்பனை செய்த 8 கடைகள், பொட்டலப்பொருட்களில் தயாரிப்பாளர்களின் பெயர் மற்றும் முகவரி, தயாரிப்பு தேதி, காலாவதியான தேதி, நிகர எடை மற்றும் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை போன்ற உரிய அறிவிப்புகள் இன்றி விற்பனை செய்த 4 கடைகள் உள்பட 12 கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

The post நெல்லை, தென்காசி மாவட்டத்தில் காலாவதியான குளிர்பானம் விற்ற 12 கடைக்காரர்கள் மீது நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Nellai, Tenkasi district ,Nellai ,Tenkasi ,Dinakaran ,
× RELATED நெல்லையில் அரசு பேருந்து ஓட்டுநர்,...