×

திருப்பை லிவனேஸ்வரர் கோயில் சித்திரை தேரோட்டம்

சமயபுரம், மே.4: மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் கோயிலில் நேற்று சித்திரை தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்ஞீலியில் அமைந்துள்ளது ஞீலிவனேஸ்வரர் கோயில். இக்கோயில் திருநாவுக்கரசர், திருஞானசம்மந்தர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற திருத்தலமாகும். களைப்புற்று வந்த அப்பருக்கு சிவபெருமான் திருக்கட்டமுது அளித்து காட்சியளித்த சிறப்பு பெற்றது இத்திருத்தலமாகும்.

இக்கோயிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் பல முக்கிய திருவிழாக்களில் ஒன்று சித்திரை தேர் திருவிழா. இந்த ஆண்டு சித்திரை தேர் திருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் தினமும் சுவாமியும் அம்பாளும் சிறப்பு அலங்காரத்தில் சிம்ம வாகனம், கிளி வாகனம், யாளி வாகனம், அன்ன வாகனம், பூத வாகனம், கைலாச வாகனம், தங்க குதிரை வாகனம், காமதேனு வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்புரிந்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் நேற்று நடந்தது. முன்னதாக தேரோட்டத்தை முன்னிட்டு ஞீலிவனேஸ்ரவர் சுவாமியும், விசாலாட்சி அம்பாளும் சிறப்பு அலங்காரத்தில் நேற்று காலை 6 மணியளவில் திருத்தேரில் எழுந்தருளினர். தேரில் எழுந்தருளிய சுவாமியையும் அம்பாளையும் ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். தொடர்ந்து 3 மணியளவில் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. தேரோட்டத்தில் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். இந்நிலையில் நேற்று திருப்பைஞ்ஞீலீயில் திடீர் மழை பெய்ததால் தேரோட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று தொடர்ந்து தேர் வடம் இழுக்கப்படும் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.விழாஏற்பாடுகளை அறநிலையத்துறை உதவி ஆணையர் லட்சுமணன், செயல்அலுவலர் மனோகரன் , ஊராட்சி மன்ற தலைவர் தியாகராஜன் மற்றும் அலுவலர்கள் செய்துள்ளனர்.

The post திருப்பை லிவனேஸ்வரர் கோயில் சித்திரை தேரோட்டம் appeared first on Dinakaran.

Tags : Tirupai Livaneswarar Temple ,Samayapuram ,Tiruppainjnjili Njilivaneswarar Temple ,Mannachanallur ,Chitrai Therottam ,
× RELATED மேட்டுப்பாளையம் அருகே தீ விபத்தில் வைக்கோல் போர் எரிந்து சேதம்