×

வேகத்தடையில் இரவு நேர பிரதிபலிப்பான் அமைப்பு

திருவாரூர், மே 4: திருவாரூரில் தினகரன் செய்தி எதிரொலி காரணமாக ரயில்வே மேம்பாலம் அருகே அமைக்கப்பட்டுள்ள வேகத்தடையில் இரவு நேர பிரதிபலிப்பான் அமைக்கப்பட்டதற்கு பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நன்றி தெரிவித்துள்ளனர். திருவாரூரில் இருந்து நாகை,காரைக்கால் மற்றும் திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் போன்ற ஊர்களுக்கு செல்வதற்காக பைபாஸ் சாலையில் ரயில்வே மேம்பாலம் ஒன்று கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்த ரயில்வே மேம்பாலத்தை ஒட்டியவாறு தேசிய நெடுஞ்சாலையில் நெடுஞ்சாலை துறையினர் மூலம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வேகத்தடை ஒன்று புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது என எவ்வித எச்சரிக்கை பலகை மற்றும் வெள்ளை கோடுகள் போன்றவை உடனடியாக அமைக்கப்படாததன் காரணமாக வேகத்தடை அமைக்கப்பட்ட நாள் முதல் தொடர்ந்து ஒரு சில தினங்கள் வரையில் அந்த வழியாக புதிதாக செல்வோருக்கு வேகத்தடை இருப்பது தெரியாமல் திடீர் திடீரென பிரேக் போட்டதால் வாகனத்தில் சென்ற பல பேர் கீழே தடுமாறி விழும் நிலை ஏற்பட்டது.

அதன் பின்னர் இது குறித்து நெடுஞ்சாலைத்துறை வைக்கப்பட்ட கோரிக்கையின் பேரில் தற்போது அங்கு இந்த வேகத்தடை மீது வெள்ளை கோடு போடப்பட்டுள்ளது. இருப்பினும் பகல் நேரத்தில் வேகத்தடை உள்ளது என்பதற்கான
அடையாளமாக வாகன ஓட்டிகளுக்கு இந்த வெள்ளைக்கோடு எச்சரிக்கையாக இருந்து வரும் நிலையில் இரவு நேரங்களில் செல்லும் வாகனங்களுக்கு இரவு நேரத்தில் ஒலிக்கும் சிகப்பு நிற பிரதிபலிப்பான் இல்லாததன் காரணமாக விபத்துக்கள் ஏற்படும் அபாயம் இருந்து வருவது குறித்தும், எனவே உடனடியாக இந்த வேகத்தடையில் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் சிகப்பு நிற பிரதிபலிப்பானை அமைத்திட வேண்டுமென நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே துறையினருக்கு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வைத்த கோரிக்கை குறித்தும் கடந்த 30ம் தேதி தினகரனில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.

இதையடுத்து அந்த வேகதடையில் இரவு நேர பிரதிபலிப்பான் தற்போது அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமாக தினகரன் நாளிதழுக்கும், நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே துறையினருக்கும் பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

The post வேகத்தடையில் இரவு நேர பிரதிபலிப்பான் அமைப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvarur ,Dinakaran ,
× RELATED மேகமூட்டமும், சாரல் மழையும் இருந்தது...