×

அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்

குளித்தலை, மே 4: அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த அய்யர் மலையில் சிவ தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ரத்தகிரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. 2017 படிகளை செங்குத்தாக கொண்ட மலை இது. சிறப்பு வாய்ந்த இந்த கோயிலில் சித்திரை தேர் திருவிழா கடந்த 21ம் தேதி கால்கோள் விழா உடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட விழா 9ம் நாளான நேற்று நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு தேர் ஏறும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, காலை 5.30 மணிக்கு மேல்6.30 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கானோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

இதில் இந்து அறநிலைத்துறை இணை ஆணையர் குமரத்துரை, எம்எல்ஏக்கள் குளித்தலை மாணிக்கம், ரங்கம் பழனியாண்டி, குளித்தலை ஆர்டிஓ புஷ்பா தேவி உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து 10ம் நாள் இன்று (4ம் தேதி) சப்த புராணம் நடைபெற்று, இரவு திருக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெறுகிறது. 11ம் நாள் மே 5ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு சாமி ரிஷப வாகனத்திலும், புஷ்பப் பல்லக்கு வாகனத்திலும் புறப்பாடு நடைபெறுகிறது. 12ம் நாள் மே 6ம் தேதி சனிக்கிழமை இரவு மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.விழா ஏற்பாடுகளை அறநிலை துறை உதவி ஆணையர் ஜெயதேவி, செயல் அலுவலர் அனிதா, மற்றும் கோவில் குடி பாட்டு காரர்கள், சிவாச்சாரியார்கள் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

The post அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர் appeared first on Dinakaran.

Tags : Chitrai Festival ,Ayyarmalai Rathinakriswarar Temple ,Kulithalai ,Chitrai festival procession ,Aiyarmalai Rathinakriswarar temple ,
× RELATED அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்