×

புன்னம்சத்திரம் அருகே அனுமதி இல்லாமல் மது விற்ற 2 பேர் கைது

வேலாயுதம்பாளையம்,மே4: கரூர் மாவட்டம் வேலாயுதம் பாளையம் அருகே பூங்கோடை வாய்க்கால் மேட்டு பகுதியில் திருட்டுத்தனமாக மதுபாட்டில்களை விற்பனை செய்து வருவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு அப்பகுதியை சேர்ந்தவர்கள் தகவல் தெரிவித்தனர்.தகவலின் அடிப்படையில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் பூங்கோடை வாய்க்கால் மேட்டு பகுதிக்கு சென்று பார்த்த போது, அங்கு ஒருவர் திருட்டுத்தனமாக மதுபாட்டில்களை வைத்து விற்பனை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. அதனடிப்படையில், நொய்யல் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்த மகுடேஸ்வரன் (48)என்பவரை கைது செய்து அவர் விற்பனைக்கு வைத்திருந்த 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

அதேபோல் மூலி மங்கலம் பிரிவு பகுதியில் திருட்டுத்தனமாக மது பாட்டில்களை விற்பனை செய்த ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே கூடலூர் பகுதியை சேர்ந்த அங்குசாமி( 34) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து விற்பனைக்கு வைத்த 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post புன்னம்சத்திரம் அருகே அனுமதி இல்லாமல் மது விற்ற 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Punnamchatram ,Velayuthampalayam ,Karur District ,Poongodai Vaikkal metu ,
× RELATED சாக்கு மூட்டைகளில் 550 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்: ஒருவர் கைது