×

ரூ.2 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் துவக்கம்

 

மேட்டூர், மே 4: வீரக்கல் புதூர் பேரூராட்சியில் ரூ.2 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை பேரூராட்சி தலைவர் தெய்வானை ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார். வீரக்கல்புதூர் பேரூராட்சி நபார்டு திட்டம் 2022-23ல் வார்டு எண் 3 மற்றும் 15ல் தார் சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இரண்டு கிலோ மீட்டர் தொலைவுக்கு தார் சாலை அமைக்க, ரூ.184 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதேபோல் 15வது நிதிக்குழு மானிய திட்ட தலைப்பின் கீழ் அகழ்வு முறையில் திடக்கழிவுகளை தரம் பிரித்தல் திட்டத்திற்கு ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த இரு பணிகளையும் நேற்று வீரக்கல்புதூர் பேரூராட்சி தலைவர் தெய்வானை ஸ்ரீ ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார். இவ்விழாவிற்கு பேரூராட்சி செயல் அலுவலர் மூவேந்தரபாண்டியன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் பொறியாளர் அன்பழகன், பேரூராட்சி துணை தலைவர் வெங்கடேசன், பேரூராட்சி உறுப்பினர் பாலமுரளி மற்றும் ஏராளமான பங்கேற்றனர்.

The post ரூ.2 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Mettur ,Veerakkal Pudur Municipality ,Municipal President ,Deivanai ,Dinakaran ,
× RELATED 810 மெகவாட் மின் உற்பத்தி நிறுத்தம்