×

சோமேஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு

 

ஓசூர், மே 4: ஓசூர் ராம்நகரில் பழமை வாய்ந்த சோமேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ேநற்று சித்திரை மாத பிரதோஷ வழிபாடு நடந்தது. பிரதோஷத்தை முன்னிட்டு சோமேஸ்வர பெருமானுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, பல்வேறு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மூலவரான சிவனுக்கும், நந்திக்கும் பல்வேறு திரவியங்களால், அபிஷேகம் நடந்தது. உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது. பின்னர், அலங்கரிக்கப்பட்ட உற்சவ மூர்த்தியை பக்தர்கள் எடுத்து வந்து, சிறப்பு வழிபாடு நடத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

The post சோமேஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Someswarar temple ,Hosur ,Ramnagar ,Dinakaran ,
× RELATED துப்புரவு ஊழியரை தாக்கிய வாலிபர் கைது