×

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜையில் பங்கேற்க பெண்கள் முன்பதிவு செய்யலாம்

 

சாத்தூர், மே 4: இருக்கன்குடி மாரியம்மன் கோயில் திருவிளக்கு பூஜையில் கலந்துகொள்ள பெண்கள் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சட்ட பேரவை அறிவிப்பு எண்.32 படி பவுர்ணமி தினத்தன்று 108 குத்து விளக்கு பூஜை வரும் 5ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு துவங்க உள்ளது. பூஜையில் கலந்து கொள்ளும் பெண் பக்தர்கள் தங்களின் ஆதார் கார்டு நகல் இரண்டு, மார்பளவு புகைப்படத்துடன் ரூ.200 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் https://irukkangudimariamman.hrce.tn.gov.in என்ற வலைதள முகவரியிலும் முன்பதிவு செய்து கொள்ளலாம். பூஜையில் கலந்து கொள்ளும் பெண் பக்தர்களுக்கு குங்குமம் பாக்கெட், கற்பூரம், ஊதுவத்தி, தீப்பெட்டி, தாலி கயிறு, விளக்கு திரி, தையல் இலை, வெற்றிலை பாக்கு, தேங்காய், வாழைப்பழம், எலுமிச்சைபழம், பூச்சரம், உதிரி பூ, பச்சரிசி, தீப எண்ணெய், அடையாள அட்டை, ஜாக்கெட் ஆகியவை வழங்கப்படும். இவற்றின் மதிப்பு ரூ.800 என கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜையில் பங்கேற்க பெண்கள் முன்பதிவு செய்யலாம் appeared first on Dinakaran.

Tags : Itankudi Mariamman Temple ,Chatur ,Thiruvilakku Puja ,Itankudi Mariamman Temple.… ,Thiruvilakku ,
× RELATED இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.50.87 லட்சம்