×

பள்ளி டிரைவர் தூக்கிட்டு தற்கொலை

 

தேவாரம், மே 4: தேவாரம் அருகே லட்சுமிநாயக்கன்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (39). தனியார் பள்ளி ஓட்டுநராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி 13 வருடங்கள் ஆகிறது. 9 வயதில் பெண் குழந்தை உள்ளது.கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, இவரது மனைவி கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பிரிந்து சென்று விட்டார்.

அதனால் மணிகண்டன் தாயோடு சேர்ந்து வசித்து வந்தார். இந்நிலையில் மணிகண்டன் தனது மனைவி பிரிந்த விரக்தியில், வீட்டில் யாரும் இல்லாதபோது, தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு தேவாரம் போலீசார், மணிகண்டன் உடலை பிரேத பரிசோதனை செய்ய உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

The post பள்ளி டிரைவர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Dewaram ,Manikandan ,Lakshminayakkanpatti East Street ,
× RELATED புகைபிடிக்க வேண்டாம் என கூறியதால்...