×

வாகனம் மோதி காவலாளி பலி

 

கோபால்பட்டி, மே 4: சாணார்பட்டி அருகே வாகனம் மோதியதில் காவலாளி பலியானார். சாணார்பட்டி அருகே கோபால்பட்டி ராம்ஜி நகரை சேர்ந்தவர் முருகன் (53). இவர் விலக்கு ரோடு அருகே உள்ள தேங்காய் மட்டை கம்பெனியில் காவலாளியாக பணி புரிந்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு விலக்கு ரோடு பிரிவு அருகே நடந்து சென்றார். அப்போது நத்தத்தில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற சரக்கு வாகனம் அவர் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சாணார்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் பரமசாமி வழக்குப்பதிவு செய்து, சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோயில் தெருவை சேர்ந்த மணிகண்டனிடம் (28) விசாரணை நடத்தி வருகிறார்.

The post வாகனம் மோதி காவலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Gopalpatti ,Chanarpatti ,Gopalpatti Ramji Nagar ,Dinakaran ,
× RELATED சாணார்பட்டி அருகே ஆலய திருவிழாவில்...