×

தூத்துக்குடியில் 95 கிராம ஊராட்சிகளில் விவசாயம், கல்வியில் 1.40 லட்சம் பேர் பயன்பெற எச்.சி.எல். நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்: அமைச்சர் உதயநிதி முன்னிலையில் கையெழுத்தானது

சென்னை: தூத்துக்குடியில் 1.40 பேர் பயன்பெறும் வகையில் எச்.சி.எல்., நிறுவனத்துடன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. எச்சிஎல் Samuday தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புதூர் மற்றும் விளாத்திக்குளம் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 95 கிராம ஊராட்சிகளில் 1,40,000 பயனாளிகளுக்கு பயனளிக்கும் வகையில் நீர்வள மேலாண்மை, விவசாயம், சுகாதாரம், கல்வி, ஊட்டச்சத்து மேலாண்மை போன்ற துறைகளில் கவனம் செலுத்தி, பின்தங்கிய குடும்பங்களுக்கு சிறந்த வருமானத்திற்கு வழிவகுக்கும் திட்டத்தை மேற்கொண்டுள்ளது.

எச்சிஎல் Samuday திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் 42,000 வீடுகளில் அடிப்படை கணக்கெடுப்பு முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டின் 95 கிராம ஊராட்சிகளில் எச்.சி.எல்., Samuday-ஐ செயல்படுத்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில், தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை செயலாளர் அமுதா மற்றும் எச்.சி.எல்., அறக்கட்டளையின் திட்ட இயக்குநர் அலோக் வர்மா ஆகியோர் நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்நிகழ்வில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ஆணையர் தாரேஸ் அகமது, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சிறப்பு செயலாளர் கருணாகரன், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திவ்யதர்சினி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல் இயக்குநர் பிரியங்கா பங்கஜம், கூடுதல் இயக்குநர் முத்து மீனாள், எச்சிஎல் நிர்வாக குழு உறுப்பினர் ஷிகர் மல்ஹோத்ரா, HCL அறக்கட்டளையின் துணைத்தலைவர் நிதி புந்திர், குழு மேலாளர் பிரிஜோ தாருக், விஸ்வலிங்கம், வைபவ் சவுகான் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post தூத்துக்குடியில் 95 கிராம ஊராட்சிகளில் விவசாயம், கல்வியில் 1.40 லட்சம் பேர் பயன்பெற எச்.சி.எல். நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்: அமைச்சர் உதயநிதி முன்னிலையில் கையெழுத்தானது appeared first on Dinakaran.

Tags : Thuthukudi ,Minister ,Udayanidhi ,Chennai ,Thuthukaludi ,H.R. ,Youth Welfare and Sports Development Department ,Udayanidi ,
× RELATED கலைஞரின் சாதனைகள் மக்கள் மனதில்...