×

புல்லட்சாமி மீது கொந்தளிப்பில் இருக்கும் தொழிலாளர்களை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

‘‘புல்லட்சாமி மீது தொழிற்சங்கங்கள் ‘செம’ கடுப்பில் இருப்பதை பற்றி சொல்லுங்களேன்…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘புதுச்சேரியில் அரசுசார்பு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாம் நஷ்டத்தில் தான் இயங்குதாம். அரசு சார்பு நிறுவனங்களை புனரமைக்க அதிகாரி ஒருத்தர் தலைமையில் கமிட்டி அமைத்து ஆராய்ந்தாங்களாம். இந்த நிறுவனங்கள் தேறுமா அல்லது தேறாதா என்று பட்டியல் போட்டு புல்லட்சாமி அரசுக்கு அனுப்பினாங்களாம். அதுல, புதுச்சேரியில் நீங்கள் கேட்டுள்ள பெரும்பாலான நிறுவனங்கள், தொழிற்சாலைகளை மூடிவிடுங்க… ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து செட்டில்மென்ட் ெசய்து வீட்டுக்கு அனுப்புங்க. இல்லையென்றால் கவர்மென்ட் திவால் ஆயிடும்னு சொன்னாங்களாம். இந்த அறிக்கையை படித்துவிட்டு அலறிப்போனாராம் புல்லட்சாமி. புதுச்சேரியில் புல்லட்சாமி முதல்வரானதும், அவரை சந்தித்து பேசிய ஊழியர்கள், எங்களை வீட்டுக்கு அனுப்பாதீங்க. நாங்கள் நல்லா வேலை செய்து லாபம் ஈட்டி தர்றோம், கம்பெனி நஷ்டத்துல இயக்காம செய்வோம்னு சொன்னாங்களாம். ஆனால், இப்போது பல மாதங்களாக வழங்கப்படாமல் இருக்கும் நிலுவை சம்பளத்தை கேட்டு, தொழிற்சங்கங்கள் பல கட்ட போரட்டங்களில் குதித்து இருக்காங்களாம். தொடர்ந்து புல்லட்சாமியை சந்தித்து எப்போது, சம்பளம் கொடுப்பீங்க என்று ஆவேசமாக கேட்டாங்களாம். அதுக்கு புல்லட்சாமி திடீர்னு உங்களை முன்பே வீட்டுக்கு அனுப்பி இருக்கணும். பாவம் பார்த்து அனுப்பாதது என் தவறுதான்னு பேசி தொழிலாளர்கள் மத்தியில் குண்டை போட்டாராம். மக்கள் பணத்தை தூக்கி மானியமாக உங்களுக்கு தர முடியாது.. இடத்தை காலி செய்யுங்கனு சர்வசாதாரணமாக சொன்னாராம். அப்புறம் தொழிலாளர்களை பார்த்து கேட்டாராம் பாரு ஒரு கேள்வி…. அதை கேட்டதும் தொழிலாளர்களின் ரத்தம் கொதிச்சு போச்சாம். அதாவது, புல்லட்சாமி தொழிலாளர்களை பார்த்து, ‘‘அரசுக்கு லாபம் ஈட்டித்தர முடியவில்லை.. நீங்கள் போராடினால் யாருக்கும் நஷ்டமில்லை, போங்க போய் வேற வேலைய பாருங்கனு சொன்னாராம். இதை கேட்ட கூட்டத்தில் இருந்தங்க டென்ஷனில் உங்களை முதல்வராக்குனது நாங்க.. எங்க உதவி இல்லாம முதல்வராகி இருக்க முடியாது என்று சென்னாங்களாம். இன்னும் சிலரோ, தொழிலாளர்களின் கூட்டம் போட்டாங்க.. அதில் மைக் பிடித்த நிர்வாகிகள் தொழில் நிறுவனங்கள் நஷ்டத்துக்கு தொழிலாளர்கள்தான் காரணம் என்பது போல சாமி பேசுறார். இது சரியில்லை. நஷ்டத்துக்கு புல்லட்சாமி போன்ற அரசியல்வாதிகள்தான் காரணம்னு சொன்னாங்களாம். இது அவங்க சொன்ன காரணம், கார்ப்பரேஷன்கள் அனைத்துக்கும் அரசியல்வாதிகளை சேர்மனாக போட்டும், அதிகப்படியான தொழிலாளர்களை வேலைக்கு வைத்து தொழிற்சாலைகளை சீரழித்ததில் சாமிக்கும் பங்கு இருக்கு. ஒரு கார்ப்பரேஷனுக்கு அண்ணன் மகனை நியமித்து, அந்த கார்ப்பரேஷனை நாசமாக்கியதில் பெரும் பங்கு அவருக்கு உண்டு என புல்லட்சாமியை தொழிற்சங்க நிர்வாகிகள் வெளுத்து வாங்கினாங்க.புல்லட்சாமியின் அரசியல் விளையாட்டு கோபத்தில் இருக்கும் தொழிலாளர்களை சாந்தப்படுத்தாது… ஆட்சி மாற்றத்துக்கு தான் வழி வகுக்கும். நீங்க தரவில்லையென்றால் போங்க… தாமரை தலைவர்களை பிடித்து… அப்புறம் என்ன செய்ய வேண்டும் என்பதை எங்கள் தொழிற்சங்க தலைவர்கள் பார்த்து கொள்வார்கள் என்று சபதம் போட்டுவிட்டு கிளம்பிட்டாங்க…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இலை கட்சி ஒரு யூனியன்லயே காணாமல் போன கதையை சொல்லுங்க, கேட்போம்…’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர் மாவட்டத்துல கணியான ஒன்றியம் இருக்குது. இந்த ஒன்றியத்துல சூரிய கட்சியோட மக்கள் நல பணிகளை பார்த்து பலரும் அந்த கட்சியில சேர்ந்துகிட்டு வர்றாங்க. இதனால இலை கட்சி கரைந்து காணாமல் போயிடுச்சாம். இதனால அங்க இருக்குற ஓரிரு தொண்டர்களும், நிர்வாகிகளும் புலம்பி வர்றாங்களாம். அதோட ஆட்சியில இருந்தப்பவே அந்த ஒன்றியத்துல 20 ஆண்டுகளுக்கு, யாரையும் ேமலே வரவிடாம வீரமானவரை கையில வெச்சிக்கிட்டு ராகத்துல தொடங்குற பெயர் கொண்டவர் ஆட்டம் போட்டாராம். இப்ப அவரு வெளியவே தலை காட்டுறதே இல்லையாம். இலைகட்சியோட நிலைமைய புரிஞ்சுக்கிட்டு, அவரே பல முக்கிய நிர்வாகிகளை அணுகி, நீங்க கட்சி மாறிடுங்க. சூரிய கட்சிக்கு போயிடுங்க. இனிமே இலை கட்சி வேலைக்கு ஆகாதுன்னு வழியனுப்பி வர்றாராம். இப்போது இலை கட்சி நிர்வாகிகள் பலபேர் சூரிய கட்சியல ஐக்கியமாகி வர்றாங்கன்னு அந்த கட்சிக்காரங்களே வெளிப்படையாக பேசிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ஹனிபீ மாவட்டத்துல கோடை காலத்துல இலையுதிர்காலம் தொடங்கி இருக்குபோல…’’ என சூசகமாக கேட்டார் பீட்டர் மாமா.
‘‘ஹனிபீ மாவட்டத்துல இலைக்கட்சி சார்பில் பூத் கமிட்டி அமைச்ச குழுவுல, ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை புறக்கணிச்சிட்டதா கொந்தளிப்பு வெடித்துள்ளதாம். அதாவது ஹனிபீ மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதி இருக்கு. இந்த 4 தொகுதிகளிலும் இலை கட்சி தற்போது புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி அமைக்க ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஏழு பேர் கொண்ட குழுவை அமைக்க இருக்காங்க. 4 தொகுதிகளிலும் சேலத்துக்காரர் சார்ந்த சமூகத்தினரையே உறுப்பினரா நியமிச்சாங்களாம். மற்ற சமூகத்தை புறக்கணிச்சிட்டதா கட்சிக்காரங்க எரிச்சலில் இருக்காங்க. அதுலயும் பிக் குளம் ரிசர்வ் தொகுதியில் வருகிறது. இந்த தொகுதியிலும் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ‘ஏற்கனவே தேனிக்காரர் தான் இந்த மாதிரி சமூக பாகுபாடு பார்ப்பாரு. இப்ப சேலத்துக்காரரும் அதே மாதிரி நடந்துக்கிறாரு. அனைத்து சமூகத்தினருக்கும் முக்கியத்துவம் தரலைன்னா, வேறு கட்சிக்கு அணி மாறிடுவோம்னு சொன்னாராம். கூட்டத்துல இருந்தவங்களும் அதுதான் சரி என்று சொன்னாங்களாம். இதனால குழுவை கலைக்கலாமா அல்லது வேண்டாமா என்ற குழப்பத்தில் இருக்கிறாராம் சேலம்காரர்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் காக்கி அதிகாரி வைத்த சிசிடிவி கேமரா பற்றி சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘குமரி கலெக்டர் அலுவலகத்தின் வளாகத்தின் பல இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் இருக்காம். ஆனால் காட்சி பொருளாக இருப்பதுதான் இப்போதைக்கு காக்கிகள் வட்டத்தில் பேச்சா இருக்காம். பராமரிப்பு இல்லாத காரணத்தால, அவை செயலிழந்து காட்சி பொருளாக இருக்காம். அண்மையில் திருட்டு வழக்கில் தொடர்புடைய வாகனம் ஒன்றை கண்காணிக்க போலீசார் கலெக்டர் அலுவலகத்துக்கு போனாங்களாம். அப்போதுதான் கலெக்டர் அலுவலக வாசல் அருகே இருந்த கேமராக்கள் காட்சி பொருளாக மாறி இருக்கும் தகவல் வெளியே வந்து இருக்காம். இப்போது காவல்துறை சார்பில் கலெக்டர் அலுவலகம் எதிரே கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிக்க முடிவு செய்து இருக்காங்க. இதற்கு குமரியின் காக்கி உயரதிகாரியே நேரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளதுதான் ஹைலைட்…’’ என்றார் விக்கியானந்தா.

The post புல்லட்சாமி மீது கொந்தளிப்பில் இருக்கும் தொழிலாளர்களை பற்றி சொல்கிறார் wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Bullatsamy ,Sema ,Pullatsamy ,Uncle ,Peter ,Puducherry ,Wiki Yananda ,Dinakaran ,
× RELATED பாஜ கட்சி யூடியூபில்தான் இருக்கிறது:...