×

பவானி கூடுதுறையில் பரிகார புரோகிதர் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானி, காலிங்கராயன்பாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (44). கூடுதுறையில் பரிகார புரோகிதர். இவரது மனைவி உமா மகேஸ்வரி. ஒரு மகன் உள்ளார். சில மாதங்களாக மணிகண்டனுக்கு போதிய வருமானம் இல்லாமல் பலரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது. பணம் கொடுத்தவர்கள் திருப்பி கேட்டு நெருக்கடி கொடுக்க தொடங்கினர். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது.

கடந்த 28ம் தேதியும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் விரக்தியடைந்த புரோகிதர் மணிகண்டன் வீட்டில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஈரோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். ஏராளமானோருக்கு திருமணத்தடை, குடும்ப பிரச்னைக்கு பரிகாரம் கண்ட புரோகிதர், தீக்குளித்து தற்கொலை செய்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post பவானி கூடுதுறையில் பரிகார புரோகிதர் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Bhavani Nadu ,Erode ,Manikandan ,Kallingarayantham, Bhavani, Erode district ,umma maheswari ,Bhavani ,Dinakaran ,
× RELATED நாகதேவம்பாளையம் ஊராட்சியில் கலைஞர் பிறந்தநாள் விழா