×

ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர் கைது

திருச்சி: திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த மாதம் 15ம்தேதி தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர் கார்த்திக் (35) ஆய்வு நடத்திய போது, ஆவணங்கள் முறையாக பராமரிக்காதது தெரிய வந்தது. அந்த நிறுவனத்துக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டது. அந்த நிறுவன சட்ட ஆலோசகர் மனோகரன் உரிய ஆவணங்களை கொடுத்தபோது, உதவி ஆய்வாளர் கார்த்திக், மற்ற நிறுவனங்கள் முறையாக கவனிக்கிறார்கள், ரூ.15ஆயிரம் லஞ்சமாக கொடுங்கள். உங்களுக்கு பிரச்னை இல்லாமல் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதுபற்றி மனோகரன், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் நேற்றுமுன்தினம் புகார் கொடுத்தார். அவர்களது ஆலோசனையின் பேரில் டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலத்தில் உதவி ஆய்வாளர் கார்த்திக்கிடம் மனோகரன் ரூ.15,000 லஞ்சமாக கொடுத்தார். அப்போது மறைந்திருந்த போலீசார் கார்த்திக்கை கைது செய்தனர்.

The post ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர் கைது appeared first on Dinakaran.

Tags : Assistant Inspector ,Labour ,Welfare ,Trichy ,Karthik ,Inspector ,Trichy Cantonment ,
× RELATED ஏற்காடு தனியார் காட்டேஜில் பயங்கரம்:...