×

பல் பிடுங்கிய விவகாரம் போலீசார் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் பாய்ந்தது

நெல்லை: நெல்லை மாவட்டம், அஅம்பை, வி.கே.புரம், கல்லிடைக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷன்களுக்கு விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கியது ெதாடர்பாக அம்பை ஏஎஸ்பி பல்வீர்சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதுதொடர்பாக மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா நடத்திய 2 கட்ட விசாரணை அறிக்கையின்படி இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் உலகராணி நியமிக்கப்பட்டார். அவர், புகார் கொடுத்த சுபாஷ் மற்றும் பலரிடமும், சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனிலும் விசாரணை நடத்தி வருகிறார்.

இதற்கிடையே இந்த வழக்கை விசாரிக்க, சிபிசிஐடி திட்டமிட்ட குற்றங்கள் பிரிவு ஏடிஎஸ்பி சங்கரும் நியமிக்கப்பட்டார். அம்பை போலீசில் அருண்குமார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஏடிஎஸ்பி சங்கர் வழக்கு பதிவு செய்துள்ளார். மேலும் வி.கே.புரம் போலீசில் வேதநாராயணன் கொடுத்த புகாரின் பேரில் ஏஎஸ்பி பல்வீர்சிங் மீது சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றொரு வழக்கு பதிவு செய்துள்ளார். இந்த 2 வழக்குகள் தொடர்பாக நாளை (5ம்தேதி) விசாரணைக்கு ஆஜராகுமாறு புகார்தாரர்களான கணேசன், அருண்குமார், 2 சிறுவர்கள், ராசு, மகேந்திரன், சாம் ஆகிய 7 பேருக்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.

The post பல் பிடுங்கிய விவகாரம் போலீசார் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் பாய்ந்தது appeared first on Dinakaran.

Tags : Naddy District ,Aaarai ,V.S. ,K.K. Pur ,Kalithikikirichi ,
× RELATED கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனுக்கு 100வது பிறந்தநாள்