×

வந்தே பாரத் ரயிலில் வழங்கிய உணவில் புழு: பயணி புகார்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம்-காசர்கோடு இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் புழு இருந்ததாக பயணி புகார் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவனந்தபுரம்-காசர்கோடு இடையேயான புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை கடந்த 25ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். வாரத்தில் வியாழக்கிழமை தவிர மற்ற நாட்களில் திருவனந்தபுரத்தில் இருந்து அதிகாலை 5.20 மணிக்கு புறப்பட்டு அதே நாள் இரவு 10.30 மணியளவில் இந்த ரயில் திருவனந்தபுரத்தை அடையும்.

பணிகள் இடையே அதிக வரவேற்பு கிடைத்து உள்ளதால் இந்த ரயிலில் அடுத்த 1 மாதத்திற்கான டிக்கெட்டுகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகளுக்கு உணவும் வழங்கப்படுகிறது. இதற்கிடையே இந்த ரயிலில் ஒரு பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் புழு இருந்ததாக புகார் கூறப்பட்டுள்ளது .

கண்ணூரில் இருந்து காசர்கோட்டுக்கு சென்ற ஒரு பயணிக்கு கிடைத்த புரோட்டாவில் புழு இருந்ததாக அந்த பயணி காசர்கோடு ரயில் நிலைய அதிகாரியிடம் புகார் தெரிவித்து உள்ளார். இந்த புகார் உடனடியாக பாலக்காடு ரயில்வே கோட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வந்தே பாரத் ரயிலில் வழங்கிய உணவில் புழு: பயணி புகார் appeared first on Dinakaran.

Tags : Vande Bharat train ,Thiruvananthapuram ,Bharat ,Kasargod ,
× RELATED பழநி-திருப்பதிக்கு வந்தே பாரத் ரயில்...