லண்டன்: இங்கிலாந்து மன்னர் 3ம் சார்லஸ் முடிசூட்டு விழா நாளை மறுநாள் மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த விழாவில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் உட்பட முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்கிறார்கள். அரச நிகழ்வான முடிசூட்டு விழாவை கண்டு ரசிக்கவும் ஆயிரக்கணக்கான மக்கள் திரளக்கூடும். இதனையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
முடிசூட்டு விழா பாதுகாப்பு நடவடிக்கையானது ‘கோல்டன் ஆர்ப்’ என்று அழைக்கப்படும் மிகப்பெரிய பாதுகாப்பு நடவடிக்கைளில் ஒன்றாக இருக்கும் என்று ஸ்காட்லாந்து காவல்துறை தெரிவித்துள்ளது. இதற்காக 11,500 காவல் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். முடிசூட்டு விழாவிற்கு அடுத்த நாள், விடுமுறை என்பதால், திங்கள் வரை இந்த கொண்டாட்டம் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது குறித்து காவல்துறை கூறுகையில், ‘‘வாழ்நாளில் ஒரு முறை வரக்கூடிய முக்கியத்துவம் வாய்ந்த விழா என்பதாலும், பெருமைக்குரிய தருணம் என்பதாலும் விழாவை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான லண்டன் மக்கள் வருகை புரிவார்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்வை மக்கள் பாதுகாப்பாக கண்டு மகிழ வேண்டும் என்று காவல்துறை விரும்புகின்றது. எனவே பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. பத்து ஆண்டுகளிலேயே முடிசூட்டு விழாவன்று ஒரு நாள் மட்டும் 11500 போலீஸ் அதிகாரிகள் பணியில் இருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளது.
The post மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழா நாளில் இங்கிலாந்தில் 11,500 போலீஸ் பாதுகாப்பு appeared first on Dinakaran.