×

இன்ஸ்டாகிராம் பழக்கம் வாழ்க்கையை அழித்தது; வீட்டு ரூமில் அடைத்துவைத்து கல்லூரி மாணவி பலாத்காரம்: வாலிபர் கைது

மார்த்தாண்டம்: கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே கடவிளாகம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். அவரது மகன் ஆஷிக் (20). டிப்ளமோ படித்துவிட்டு வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். தற்போது வேலையை விட்டுவிட்டு சொந்த ஊரில் வேலையில்லாமல் சுற்றித்திரிந்தார். இந்த நிலையில், அவருக்கும் காப்பிக்காடு பகுதியை சேர்ந்த 18வயது சிறுமிக்கும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறுமி குழித்துறை பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். ஆஷிக்கின் காதல் வலையில் விழுந்த மாணவி, ஆஷிக்கை பெரிதும் நம்பினார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட வாலிபர், மாணவியை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

இதனை நம்பிய மாணவி, சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் கல்லூரிக்கு செல்லாமல் காதலன் ஆஷிக் மாணவியை தனது வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். அந்த நேரத்தில் அவரது வீட்டில் யாரும் இல்லாததால் மாணவியை தனது அறைக்குள் அழைத்து சென்றார். பெற்றோருக்கு தெரியாமல் அறைக்குள் 2 நாட்கள் அடைத்து வைத்து மாணவியை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனிடையே மாணவியை காணாததால், அவரது தந்தை புதுக்கடை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் மாணவியின் செல்போனை தொடர்புகொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

மாணவியின் செல்போன் கடைசியாக எங்கிருந்தது என்ற தகவலை சேகரித்த போலீசார் சரியாக ஆஷிக் வீடு அமைந்துள்ள பகுதி என்பது தெரியவந்தது. இந்த நிலையில் திடீரென்று மனம் மாறிய ஆஷிக் நீ உனது வீட்டுக்கு செல், நாம் பிறகு திருமணம் செய்துகொள்ளலாம் என்று மாணவியிடம் கூறி உள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த மாணவி, தன்னை உடனே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் எதையும் காதில் வாங்காத ஆஷிக், தனது தேவை முடிந்ததும் மாணவியை நைசாக அழைத்து சென்று காப்பிக்காடு சென்னித்தோட்டம் பஸ் நிறுத்தத்தில் இறக்கிவிட்டுவிட்டார்.

அப்போதும் மாணவி நான் வீட்டுக்கு செல்லமாட்டேன். என்னை திருமணம் செய்துகொள் என்று கெஞ்சி இருக்கிறார். இதனை கண்டுகொள்ளாத ஆஷிக், மாணவியை விட்டுவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். காதலனை நம்பி நடுரோட்டுக்கு வந்துவிட்டோம் என்பதை தாமதமாக உணர்ந்த மாணவி, செய்வதறியாமல் திகைத்தார். இதற்கிடையே பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த மாணவியை போலீசார் பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து அவரிடம் விசாரித்தனர். அப்போது நடந்த விவரத்தை கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தந்தை, ஆஷிக் மீது மார்த்தாண்டம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்படி மாணவியை கடத்தி சென்று பலாத்காரம் செய்ததற்காக ஆஷிக் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.

போதையில் ஜாலி
மாணவியை பஸ் நிறுத்தத்தில் தவிக்க விட்டுவிட்டு நேராக நண்பர் ஒருவரின் தோட்டத்துக்கு சென்று உள்ளார் ஆஷிக். அங்கு நண்பர்களுடன் ஜாலியாக அமர்ந்துகொண்டு மதுவிருந்தில் பங்கேற்றுள்ளார். நன்றாக குடித்துவிட்டு மட்டையான ஆஷிக்கை, போலீசார் அந்த இடத்துக்கே சென்று கைது செய்தனர்.

The post இன்ஸ்டாகிராம் பழக்கம் வாழ்க்கையை அழித்தது; வீட்டு ரூமில் அடைத்துவைத்து கல்லூரி மாணவி பலாத்காரம்: வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Marthandam ,Kannyakumari District ,Kadavavalagam ,Ashik ,Instagram ,
× RELATED மார்த்தாண்டம் தேனீ வளர்ப்போர்...