×

அனைவரையும் சிரிக்க வைத்து மகிழ்வித்த கலைஞன் மறைந்துவிட்டார்: மனோபாலா மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல்..!!

சென்னை: தமிழ் பட இயக்குநரும், பிரபல நகைச்சுவை நடிகருமான மனோபாலா (வயது 69) உடல்நலக்குறைவால் காலமானார். கல்லீரல் பிரச்னைக்கு 15 நாளாக சிகிச்சை பெற்றநிலையில் மனோபாலா சென்னையில் உள்ள வீட்டில் காலமானார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள இயக்குனர் மனோபாலாவின் உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இயக்குனர்கள் எச்.வினோத், சுசீந்திரன், நடிகர்கள் சந்தான பாரதி, தாமு, சார்லி உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதேபோல் இயக்குநர் மணிரத்னம், நடிகர் சித்தார்த், இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா, ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ்: மனோபாலாவின் மறைவு செய்தி கேட்டு இதயம் நொறுங்கி போனது. இயக்குனர் மனோபாலாவின் ஆன்மா சாந்தி அடையட்டும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் டிவீட் செய்துள்ளார்.

இயக்குனர் சுசீந்திரன்: சக இயக்குனராக மனோபாலாவுடன் நீண்ட நாட்கள் பயணித்துள்ளேன், மிகவும் இனிமையான மனிதர் என கூறியுள்ளார்.

நடிகர் துல்கர் சல்மான்: நடிகர் மனோபாலா மிகவும் அன்பானவர், கனிவானவர் என்று நடிகர் துல்கர் சல்மான் புகழாரம் சூட்டியுள்ளார். அனைவரையும் சிரிக்க வைத்து மகிழ்வித்தவர் என்று நடிகர் துல்கர் சல்மான் டிவீட் செய்துள்ளார். நான் அவருடன் இணை எந்து பணியாற்றிய தருணம் என்றும் என் நினைவில் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பா.ரஞ்சித்: இயக்குனரும் நடிகருமான மனோபாலா மறைவுக்கு இயக்குனர் பா.ரஞ்சித் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

நடிகர் சசிகுமார்: அனைவரிடமும் கலகலப்பாக பழகும் குணம் கொண்டவர் மனோபாலா.

நடிகர் சார்லி: கலகலப்பாக இருக்கும் கலைஞன் மறைந்துவிட்டார் என்பது வேதனை அளிக்கிறது.

நடிகர் நாசர்: எளிமையான, பாசமிக்க, பண்பான மனிதர் மனோபாலா.

நடிகர் விஷால்: மனோபாலாவின் மறைவு அதிர்ச்சியளிக்கிறது, அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.

நடிகர் சிங்கமுத்து: மனம் விட்டு பேசக்கூடிய, மகிழ்ச்சிகரமான மனிதர் மனோபாலா.

நடிகர் வடிவேலு: மனோபாலா மறைந்த செய்தியை அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். இயக்குனரும், நடிகருமான மனோபாலா மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். சொந்த சகோதரர் போல பழகக் கூடியவர் மனோபாலா என்று நடிகர் வடிவேலு நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் சீமான்: இயக்குனரும் நடிகருமான மனோபாலா மறைவு தமிழ்த் திரைத்துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். காலத்தால் அழியாத கலைப்படைப்புகளை தந்த திரைப்பட இயக்குநர் மனோபாலா என்று சீமான் புகழாரம் சூட்டியுள்ளார். பாரதிராஜா பாசறையிலிருந்து வந்தாலும் தனக்கென தனித்துவமான பாணியை கொண்ட வெற்றிகரமான இயக்குநர் மனோபாலா என்றும் கூறியுள்ளார்.

பாஜக தலைவர் அண்ணாமலை: இயக்குநரும், நடிகருமான மனோபாலா மறைவுக்கு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஒன்றிய அமைச்சர் எல்.முருகன்: இயக்குனரும், நடிகருமான மனோபாலாவின் மறைவு திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு. மனோபாலாவை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும் எனது
ஆழ்ந்த இரங்கல் என்று ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.

கே.எஸ்.அழகிரி: திரைப்படத்துறையில் சிறப்பாக பங்காற்றிய மனோபாலா மறைவு செய்தியறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

சி.பி. ராதாகிருஷ்ணன்: திரைப்பட இயக்குனரும், நடிகருமான மனோபாலா மறைவுக்கு ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார். நண்பர் மனோபாலா காலமானார் என்ற செய்தியை கேட்டு மனவேதனை அடைந்தேன் என்று கூறியுள்ளார்.

The post அனைவரையும் சிரிக்க வைத்து மகிழ்வித்த கலைஞன் மறைந்துவிட்டார்: மனோபாலா மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல்..!! appeared first on Dinakaran.

Tags : MANOBALA ,Chennai ,Manopala ,
× RELATED காசு வாங்க போனேன் படம் வாங்கி வந்தேன்: சந்தானம் ‘கலகல’