×

கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சுட்டுக்கொலை..!!

ஆப்பிரிக்கா: கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் அதிபர் யோவேரி முசவேனி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது அமைச்சரவையில் தொழிலாளர் துறை அமைச்சராக இருந்து வந்தார். மேலும் இவர் ஒரு ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஆவார். பாதுகாப்பு பிரதியமைச்சராகவும் அவர் பதவி வகித்துள்ளார். இந்நிலையில் அந்நாட்டின் தலைநகரான கம்பாலா பகுதியில் உள்ள அவரது வீட்டில் நேற்று காலை அமைச்சர் சார்லஸ் எங்கோலாவுக்கும் அவரது பாதுகாவலர் ஒருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த வாக்குவாதத்தால் மேலும் ஆத்திரம் அடைந்த பாதுகாவலர் திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியால் அமைச்சரை சுட்டுள்ளார். அங்குத் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதும் பாதுகாப்புக்கு இருந்த மற்ற பாதுகாப்பு போலீசார் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அமைச்சர் சார்லஸ் எங்கோலா ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையே அமைச்சரைச் சுட்டுக் கொன்ற பாதுகாவலரும் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிரிழந்ததாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சுட்டுக்கொலை..!! appeared first on Dinakaran.

Tags : Minister of Labour Welfare ,Uganda ,Africa ,President ,Yoweri Musaveni ,African ,Minister ,Welfare ,Dinakaran ,
× RELATED ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்