×

குன்னூர் ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் பிரம்மகமலம் பூ: அதிசய பூவை வியப்புடன் பார்த்து ரசித்த குடியிருப்புவாசிகள்

நீலகிரி : நீலகிரி மாவட்டம் குன்னூரில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் பிரம்மகமலம் பூக்கள் ஒரு வீட்டில் பூத்திருப்பதே குடியிருப்புவாசிகள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு செடி,கொடிகள் மற்றும் தாவரவகைகள் அதிக அளவில் உள்ளன.

இந்நிலையில் குன்னூரில் ராம்குமார் என்பவரது வீட்டில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் பிரம்மகமலம் பூக்கள் பூத்துள்ளன.இந்த அதிசய பூ குறித்து அறிந்த அக்கம் பக்கத்தினர் ஆர்வமாக பார்த்ததுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். வெண்மை நிறம் கொண்ட பிரம்மகமலம் பூ இரவில் பூத்து சிலமணி நேரங்களில் உதிர்ந்துவிடும். நறுமணம் கொண்ட இந்த பிரம்மகமலம் பூ ஜூலை முதல் செப்டெம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் பூக்கும் தருணம் கொண்டவை இதற்கு நிஷாகந்தி என்ற சிறப்பு பெயரும் உள்ளது.

The post குன்னூர் ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் பிரம்மகமலம் பூ: அதிசய பூவை வியப்புடன் பார்த்து ரசித்த குடியிருப்புவாசிகள் appeared first on Dinakaran.

Tags : Gunnur ,Nilgiris ,Nilgiri District ,
× RELATED நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி...