×

ராணுவத்தில் ‘ஸ்விட்ச் போர்டு’ ஆபரேட்டர்

மகாராஷ்டிரா, புனேயிலுள்ள சதர்ன் கமாண்ட் சிக்னல் ரெஜிமென்ட்டில் ‘ஸ்விட்ச் போர்டு ஆபரேட்டர்’ பணிக்கு 10ம் வகுப்பு படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Civilian Switch Board Operator Grade II: 53 இடங்கள் (பொது-15, ஒபிசி-11, எஸ்சி-9, எஸ்டி-5, பொருளாதார பிற்பட்டோர்- 6, மாற்றுத்திறனாளி-2, முன்னாள் ராணுவத்தினர்-5)

சம்பளம்: ரூ.21,700.

வயது வரம்பு: 18 முதல் 25க்குள்.

தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் PBX Board பயன்படுத்துவதில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். எழுத்துதேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல், மருத்துவ வசதி மற்றும் PBX Board பயன்படுத்துவதில் விண்ணப்பதாரரின் திறமை ஆகியவற்றின் அடிப்படையில் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். General Intelligence & Reasoning, General Awareness, General English, Numerical Aptitude ஆகிய பாடப்பிரிவுகளிலிருந்து கொள்குறி வகை கேள்விகள் கேட்கப்படும். மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.indianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 08.05.2023.

The post ராணுவத்தில் ‘ஸ்விட்ச் போர்டு’ ஆபரேட்டர் appeared first on Dinakaran.

Tags : Sadarn Comand Signal Regiment ,Pune, Maharashtra ,Dinakaran ,
× RELATED பிரபல நிறுவனங்கள் தயாரிக்கும்...