×

ஈரோட்டில் வணிகர் தின மாநாடு: கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு 5ம்தேதி விடுமுறை

அண்ணாநகர்: ஈரோட்டில் வரும் 5ம் தேதி வணிகர் தின மாநாடு நடக்க இருப்பதால் கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு விடுமுறை விடப்படும் என கோயம்பேடு காய்கறி மார்க்கெட் அனைத்து கூட்டமைப்பு சங்க தலைவர் ஜி.டி.ராஜசேகர் தெரிவித்துள்ளார். ஆனால், பூ மற்றும் பழ மார்க்கெட் வழக்கம்போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மே 5ம்தேதி ஈரோட்டில் வணிகர் தின மாநாடு நடக்கிறது. மாநாட்டுக்கு வியாபாரிகள் அனைவரும் செல்ல இருப்பதால் கோயம்பேடு காய்கறி மார்க்கெட் முழுவதும் அடைக்கப்படும். ஆனால், கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள பூ மற்றும் பழ மார்க்கெட் அன்றைய தினத்தில் வழக்கம்போல் செயல்படும். அனைத்து கடைகளையும் மூடிவிட்டால் பொதுமக்கள் பொருட்கள் வாங்குவதற்கு சிரமப்படுவார்கள் என்பதாலும் பூ மற்றும் பழ விற்பனை அதிகரிக்கக்கூடும் என்பதாலும் வரும் 5ம்தேதி பூ மற்றும் பழ மார்க்கெட் மட்டும் திறக்கப்படுகிறது. திருச்சியில் மே 5ம்தேதி நடக்கும் வணிகர் தின மாநாட்டில் பூ மற்றும் பழ வியாபாரிகளும் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

The post ஈரோட்டில் வணிகர் தின மாநாடு: கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு 5ம்தேதி விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Erode Traders Day Conference ,Koyambedu ,Vegetable Market ,Annanagar ,traders' day ,Erode ,vegetable ,Dinakaran ,
× RELATED முதலமைச்சரின் விரிவான மருத்துவக்...