×

பட்டியலின சாதி சான்றிதழின் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய டிஎன்பிஎஸ்சிக்கு அதிகாரம் இல்லை: ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: பட்டியலின சாதி சான்றிதழின் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய டிஎன்பிஎஸ்சிக்கு அதிகார வரம்பு இல்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஜெயராணி ஆதி திராவிட கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்து பி.காம் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர். திருமணத்தின் போது, ​​அவர் மீண்டும் இந்து மதத்திற்கு மாறினார், மேலும் 21.10.1992 அன்று இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது.

மனுதாரரின் கணவர் 11.4.1996 அன்று விபத்தில் இறந்தார். 1996-97ல் குரூப் 4 தேர்வில் பங்கேற்று இளநிலை உதவியாளர் தட்டச்சராக நியமிக்கப்பட்ட கணவரை இழந்த ஜெயராணி என்பவர் வழக்கு தொடர்ந்தார். கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறி பட்டியலினத்தவர் சாதிச்சான்று பெற்றிருந்தார் ஜெயராணி. பணி நியமனத்துக்கு கணவர் பெயரில் தந்த சாதி சான்றுக்கு பதில் தந்தை பெயரில் பெற்ற சாதி சான்றிதழை தர டிஎன்பிஎஸ்சி ஆணையிட்டது.

இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயராணி வழக்கு தொடர்ந்தார். தகுதியான அதிகாரி வழங்கிய சாதி சான்றிதழ் செல்லத்தக்கது என தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். தந்தை பெயரில் பெற்ற சாதி சான்றிதழை தர டிஎன்பிஎஸ்சி ஆணையிட முடியாது என்றும் தனி நீதிபதி தீர்ப்பு அளித்தார் .

The post பட்டியலின சாதி சான்றிதழின் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய டிஎன்பிஎஸ்சிக்கு அதிகாரம் இல்லை: ஐகோர்ட் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : DNSC ,Chennai ,DNBSC ,Dinakaran ,
× RELATED ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப்...