×

சென்னைக்கு கடத்தப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்புள்ள செம்மரம் பறிமுதல்: கைது செய்யப்பட்ட 16 பேரில் 13 பேர் தமிழ்நாட்டை சேர்ந்த கூலிகள்

ஆந்திரா: திருப்பதியில் இருந்து சென்னைக்கு கடத்த முயன்ற ரூ.40 லட்சம் மதிப்புள்ள செம்மரம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த 13 பேர் உட்பட 16 பேர் கைது செய்யப்பட்டனர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் எஸ்.பி. ரிஷாந்த் ரெட்டிக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து செம்மரம் கடத்தும் கும்பலை போலீசார் கைது செய்தனர்.

சித்தூர் மாவட்ட கூடுதல் எஸ்.பி. ஸ்ரீ லட்சுமி மேற்பார்வையில் புத்தலப்பட்டு மற்றும் குடிப்பாலா மண்டலங்களில் வாகன சோதனையில் ஈடுப்பட்ட போது சென்னை – பெங்களூரு சாலையில் உள்ள எம்.சி.ஆர். சந்திப்பில் தடுக்கப்பட்ட 2 கார்களில் இருந்து செம்மரம் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.5 லட்சம் மதிப்புள்ள செம்மரம் பறிமுதல் செய்யப்பட்டு 11 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல புத்தலப்பட்டு போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் பீலேறு, சித்தூர், கடப்பா சாலையில் மற்றொரு வாகனம் பிடிப்பட்டது. இதில் இருந்த 5 கூலி தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 15 பேரில் 13 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்.

The post சென்னைக்கு கடத்தப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்புள்ள செம்மரம் பறிமுதல்: கைது செய்யப்பட்ட 16 பேரில் 13 பேர் தமிழ்நாட்டை சேர்ந்த கூலிகள் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,Andhra Pradesh ,Tiruppati ,Nadakam ,Dinakaran ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...