×

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை தேரோட்டம் : சிவ கோஷங்களை எழுப்பி பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர்!!

மதுரை : சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி – சுந்தரேஸ்வரர் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் சிவ கோஷம் எழுப்பி ஏராளமான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர். உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சித்திரை திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் மீனாட்சி அம்மனும் சுந்தரேஸ்வரரும் வெவ்வேறு வாகனங்களில் மதுரை மாசி வீதிகளில் எழுந்தருளி அருள்பாலித்து வருகின்றனர். சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது.

மாலையில் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வ்ரர் மணக்கோலத்தில் எழுந்தருளி மாசி வீதிகள் வழியாக உலா வந்தனர். இந்த நிலையில் 11வது நாள் நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் கோவில் தேரோட்டம் இன்று காலை 6மணிக்கு தொடங்கியது. இதில் சுந்தரேஸ்வர பெருமான் பெரிய தேரிலும் மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றன. அர அர சுந்தர, மீனாட்சி சுந்தர என முழக்கங்களை எழுப்பி ஏரளாமானோர் தேரினை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். இதனை காண்பதற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் மதுரை வீதிகளில் குவிந்துள்ளனர். கீழ மாசி வீதியில் தொடங்கிய தேரோட்டம், தெற்கு மற்றும் மேல மாசி வீதிகளை கடந்து வடக்கு மாசி வீதியை அடைகிறது. இறுதியில் ஆரம்பமான இடத்தை அடைந்து தேரோட்டம் நிறைவுபெறுகிறது.

The post மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை தேரோட்டம் : சிவ கோஷங்களை எழுப்பி பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர்!! appeared first on Dinakaran.

Tags : Amman ,Temple ,Sitru ,Shiva ,Madurai ,Meenakshi ,Sundereshwarar ,Sitra festival ,Madurai Meenakshi Amman Temple ,Chitrishi ,
× RELATED காமாட்சி அம்மன் கோயிலில் ₹37.12 லட்சம் உண்டியல் காணிக்கை