×

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழை சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 10 அடி உயர்வு

 

பெரியகுளம்,மே 3: மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 2 நாட்களில் 10 அடி உயர்ந்துள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பிப்ரவரி மாத துவக்கம் முதல் மழை பெய்யாத நிலையில் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து மார்ச் மாத துவக்கத்தில் 30 அடியாக குறைந்து. இந்நிலையில், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் அவ்வப்போது பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து 57 அடியாக இருந்த நிலையில் அணைக்கு முற்றிலும் நீர் வரத்து இல்லாமல் போனது.

இதனைத் தொடர்ந்து கடந்த 5 நாட்களாக சோத்துப்பாறை அணை நீர்பிடிப்பு பகுதிகளான மேற்குத்தொடர்ச்சி மலை மற்றும் அகமலை, கண்ணக்கரை, உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கன மழையால் அணைக்கு நீர்வரத்து வரத் துவங்கியது. இதனை தொடர்ந்து அணையின் முழு கொள்ளளவான 126.28 அடியில் 66.58 அடியாக இருந்த அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து செய்த கன மழையின் காரணமாக நீர் மட்டும் 10 அடி உயர்ந்து நேற்று காலை நிலவரப்படி 77.90 அடியாக அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

கடந்த 5 நாட்களாக பெய்து வரும் கோடை மழையால் அணையின் நீர்மட்டம் இதுவரை 20 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் சோத்துப்பாறை அணையில் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 126.28 அடியில் 77.90 அடியாக உள்ள இந்நிலையில் அணைக்கு நீர்வரத்து 96.28 கன அடியாக உள்ளது. இந்நிலையில், அணையில் இருந்து குடிநீருக்காக 3 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேலும் சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருவதால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழை சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 10 அடி உயர்வு appeared first on Dinakaran.

Tags : Western Ghats ,Sothupparai dam ,Periyakulam ,
× RELATED தமிழக – கேரள எல்லையோர கிராமங்களில்...